ஈரானின் குட்டி தேவதைக்கு கொரோனா!- ஃபேஸ்புக்கில் வைரலாகும் சிறுமி யார்?

ஈரானின் குட்டி தேவதைக்கு கொரோனா என்று ஒரு புகைப்படத்துடன் கூடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த சிறுமி யார், அவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link படுக்கையில் இருக்கும் சிறுமியின் வீடியோவை பகிர்ந்துள்ளனர். அதனுடன், அழகு சிறுமியின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஈரானிய குட்டி தேவதைக்கு கொரானாவாம்..😢😢 Pray for her..” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ பதிவை Syeda […]

Continue Reading

கொரோனாவுக்கு பலியான இத்தாலி மருத்துவ ஜோடி இவர்களா?

இத்தாலியில் கொரோனாவுக்கு பலியான மருத்துவ தம்பதியர் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link காதல் ஜோடி நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “இந்தப்பதிவு உலுக்குகிறது.. இவர்கள் இருவரும் இத்தாலியைச் சேர்ந்த மருத்துவர்கள்.இருவரும் தம்பதியர்கள். பல நாட்களாக கொரோனோ தொற்றாளர்களுக்கு மருத்துவம் பார்த்து இரவு பகலாக 134 பேரை குணப்படுத்தியிருக்கிறார்கள்.ஆனால் இவர்களிருவருக்கும் கொரோனோ நோய் தொற்றியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் […]

Continue Reading

இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் தெருவில் இறந்து கிடந்தனரா?

‘’இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் தெருவில் இறந்து கிடக்கும் காட்சி,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், ஏற்கனவே பகிரப்பட்ட ஒரு பதிவின் ஸ்கிரின்ஷாட்டை வெளியிட்டுள்ளனர். ‘’இத்தாலி நாட்டின் இன்றைய சூழ்நிலை, இறந்தவர்களின் உடலைக் கூட எடுக்க முடியாத நிலை,’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். […]

Continue Reading

இந்தோனேஷியா டாக்டர் ஹாடியோ அலி சாகும் முன் எடுத்த புகைப்படம் இதுவா?

‘’இந்தோனேஷியா டாக்டர் ஹாடியோ அலி கொரோனாவில் சாகும் முன்பாக எடுத்த புகைப்படம்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் வைரல் தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில் இருப்பவர் உண்மையிலேயே டாக்டர்தானா, அவர் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்துவிட்டாரா என்ற உண்மை எதுவும் தெரியாமல், இதே பதிவை மேலும் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: மேற்கண்ட புகைப்படத்தில் குழந்தைகளுக்கு, கேட்டில் நின்றபடி […]

Continue Reading

இத்தாலி தேவாலயத்தில் விநோத பறவை!- வைரல் வீடியோ உண்மையா?

இத்தாலி தேவாலயம் ஒன்றில் மனிதனைப் போன்று தோற்றமளிக்கும் விநோத பறவை வந்ததாக ஒரு வீடியோ வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 26 விநாடி ஓடக்கூடிய வீடியோவை வெளியிட்டுள்ளனர். சாத்தான் என்று சொல்லப்படுவது போன்று ஒரு உருவம் தேவாலயத்தின் மீது ஏறுகிறது. பின்னர் பறந்து சிலுவையின் மீது அமர்கிறது. பின்னர் சிறகு விரித்து பறக்கிறது.  நிலைத் தகவலில், “இன்று இத்தாலியின் […]

Continue Reading

இந்தியாவின் முட்டாள்தனம் என்று அறிவித்ததா யுனெஸ்கோ? உண்மை அறிவோம்!

சுய ஊரடங்கின் போது, மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கைதட்டும் நிகழ்வில் மக்கள் நடந்துகொண்டது இந்திய வரலாற்றில் முட்டாள்தனமான தருணம் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியதாக ஒரு ட்வீட் பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link யுனெஸ்கோ வெளியிட்ட ட்வீட் பதிவின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதன் தமிழ் மொழியாக்கத்தை மேலே வைத்துப் பதிவை உருவாக்கியுள்ளனர். அதில், “சுய ஊரடங்கின் போது […]

Continue Reading

அமெரிக்க விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ்க்கு தடுப்பூசி கண்டுபிடித்ததாக பரவும் வதந்தி!

‘’அமெரிக்க விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ்க்கு தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டனர்,’’ என்று கூறி பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், Sugentech – SGT1 – flex COVID 19 IgM/IgG என்ற பெயரிட்ட ஒரு மருந்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். ஆனால், அது கொரோனா வைரஸ்க்கான தடுப்பூசியா என்று தெரியவில்லை. இருந்தாலும் இது உண்மை என […]

Continue Reading

தமிழகத்தில் 9 பேர் மரணம் என்று மு.க.ஸ்டாலின் வதந்தி பரப்பினாரா?

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் கொரோனாவால் 9 பேர் இறந்ததாக ட்விட்டரில் வதந்தி பரப்பிவிட்டு அதை நீக்கிவிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Twitter Link Archived Link மு.க.ஸ்டாலின் ட்வீட் பதிவு ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழகத்தில் கொரோனாவால் 9 பேர் உயிரிழப்பு, 8000 பேருக்கு பாதிப்பு, சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களைத் தனிமைப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தல் ஆகியவை மக்களுக்கு அச்சத்தை […]

Continue Reading

கோவை ஊட்டி சாலையில் மான்கள்!- வைரல் புகைப்படம் உண்மையா?

ஊரடங்கு காரணமாக மக்கள் வீட்டில் முடங்கியதால் கோவை – ஊட்டி சாலையில் மான்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஓய்வெடுத்தது என்று ஒரு புகைப்படம் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சாலையில் மான்கள் ஓய்வெடுக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “#கோவையில் மனிதர்கள் வீட்டிற்குள் முடங்கியதால் #மகிழ்ச்சியாக இருக்கும் #மான்கள்..😍 கோவை டூ #ஊட்டி மெயின் ரோடு🖤🖤🖤🖤” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Tamil Cinema […]

Continue Reading

ரஷ்யாவில் கொரோனா வைரஸ்; மக்களை கட்டுப்படுத்த சிங்கங்கள்? உண்மை இதோ…

‘’ரஷ்யாவில் கொரோனா வைரஸ் பரவுவதால் மக்களை கட்டுப்படுத்தும் பணியில் சிங்கங்கள் ஈடுபட்டுள்ளன,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவுகளை காண நேரிட்டது. இவற்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link Facebook Claim Link Archived Link இதேபோல, மேலும் பல ஃபேஸ்புக் பதிவர்கள் தகவல் பகிர்ந்ததை காண நேரிட்டது. உண்மை அறிவோம்:கொரோனா வைரஸ் வந்தது முதலாக, வித விதமான வதந்திகள் சீனா உள்ளிட்ட உலக நாடுகளை […]

Continue Reading

இத்தாலி அதிபர் கண்ணீர் விட்டு அழும் புகைப்படம் உண்மையா?

‘’இத்தாலி அதிபர் கொரோனா வைரஸ் பற்றி கண்ணீர் விட்டு கதறல்,’’ எனும் தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்படும் சில பதிவுகளை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link  இதே நபர், ஏற்கனவே இந்த புகைப்படத்தை வைத்து வெளியிட்ட மற்றொரு ஃபேஸ்புக் பதிவையும் காண நேரிட்டது. அதனையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.  Facebook Claim Link Archived Link இதனை மேலும் பலர் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.  […]

Continue Reading

கொரோனா வைரஸ் கிருமியை ஒழிக்கவே 14 மணி நேர ஊரடங்கு!- வைரல் தகவல் உண்மையா?

கொரோனா வைரஸ் கிருமியை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்திலேயே 16 மணி நேர மக்கள் சுய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்று சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link புகைப்பட வடிவிலான பதிவு பகிரப்பட்டுள்ளது. அதில், “மார்ச் 22ம் தேதி ஊரடங்கு உத்தரவு எதற்காக அதன் பலன் என்ன சற்று விரிவாகப் பார்ப்போம். உலகம் முழுவதும் நடந்த ஆராய்ச்சிகளில் வைரஸ் கிருமி உயிரோடு இருக்கும் நேரம் […]

Continue Reading

கொரோனா வைரஸ் பற்றி புரியாத மொழியில் கமல்ஹாசன் ட்வீட் வெளியிட்டாரா?

‘’கொரோனா வைரஸ் பற்றி கமல்ஹாசன் வெளியிட்ட புரியாத ட்வீட்,’’ என்ற தலைப்பில் வைரலாக பகிரப்படும் பதிவு ஒன்றை சமூக ஊடகங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய நேரிட்டது. தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link கமல்ஹாசன், 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கொரோனா வைரஸ் மற்றும் சீனா பற்றி கேலி செய்து பதிவு வெளியிட்டார் எனக் குறிப்பிட்டுள்ளனர். இது பார்க்க பகடி போல இருந்தாலும், பலர் இதனை உண்மை என […]

Continue Reading

கொரோனா வைரஸ் பாதித்தவர்களை துரத்தி பிடிக்கும் சீன போலீசார்- வைரல் வீடியோ உண்மையா?

‘’கொரோனா வைரஸ் பாதித்தவர்களை துரத்தி பிடிக்கும் சீன போலீசார்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Video Link இதில், போலீஸ் சீருடை அணிந்தவர்கள், ரயில் நிலையம் ஒன்றில் நுழைந்து, பரபரப்பாக ஓடிச் சென்று சிலரை கைது செய்கிறார்கள், ரயில் பயணிகளை அடிக்கிறார்கள். பயணிகள் உள்பட அனைவரும் மாஸ்க் அணிந்துள்ளனர். பார்ப்பதற்கு சீனாவில் நடந்ததுபோல இது உள்ளது. […]

Continue Reading

டெட்டால் பாட்டில் மீது கொரோனா வைரஸ் பெயர் 2019ல் குறிப்பிடப்பட்டதா?

‘’டெட்டால் பாட்டில் மீது கொரோனா வைரஸ் பெயர் 2019ம் ஆண்டில் அச்சிடப்பட்டது,’’ என்று கூறி ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link  இதில், ‘’2019ல் தயாரித்த டெட்டால் பாட்டிலில் கொரோனா வைரஸ் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கொரோனா பரவுவது 2020ம் ஆண்டில். இது எப்படி முன்கூட்டியே டெட்டால் தயாரிப்பவருக்கு தெரியும்? இது கார்ப்பரேட் நிறுவனங்களால் திட்டமிட்டு […]

Continue Reading

வேகவைத்த பூண்டு மற்றும் வெந்நீர் கொரோனா வைரஸ் வராமல் தடுக்குமா?

‘’வேகவைத்த பூண்டு மற்றும் வெந்நீர் சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் வராமல் பாதுகாக்க முடியும்,’’ என்ற தலைப்பில் ஒரு வைரல் ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’கொரோனா வைரஸ் தாக்காமல் தடுக்க, பூண்டை வேக வைத்துச் சாப்பிடுவதோடு, அது வேகவைக்கப்பட்ட நீரையும் வடிகட்டி குடிக்க வேண்டும்,’’ என்று விரிவாக செய்முறை ஒன்றை எழுதியுள்ளனர். உண்மை அறிவோம்: […]

Continue Reading

இயேசுவை பிரார்த்திக்க சொன்னாரா முதல்வர் எடப்பாடி பழனிசாமி?- ஃபேஸ்புக் வதந்தி

‘’கொரோனா வைரஸ் தொடர்பாக வதந்திகளை நம்ப வேண்டாம். அனைவரும் இயேசுவிடம் பிரார்த்தனை செய்யுங்கள்,’’ என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தமிழக முதலமைச்சர் படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி கொரானா தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் வதந்திகளை […]

Continue Reading

கொரோனா வைரஸ் பற்றி யுனிசெப் முன்னெச்சரிக்கை டிப்ஸ் எதுவும் வெளியிட்டுள்ளதா?

‘’கொரோனா வைரஸ் பற்றி யுனிசெப் வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை டிப்ஸ்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டுள்ள பதிவு ஒன்ற காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link  இந்த பதிவில், யுனிசெப் அறிவிப்பு என்று தலைப்பிட்டு, நிறைய முன்னெச்சரிக்கை டிப்ஸ்களை குறிப்பிட்டுள்ளனர். இவற்றை உண்மை என நம்பி பலரும் வைரலாக ஷேர் செய்ய தொடங்கியுள்ளனர். உண்மை அறிவோம்:மேலே உள்ள ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ள முன்னெச்சரிக்கை குறிப்புகள் அனைத்தும் […]

Continue Reading

கொரோனா வைரஸ் போகர் எழுதிய பாடல் என்று ஃபேஸ்புக்கில் பரவும் வதந்தி!

கொரோனா வைரஸ் குறித்து போகர் எழுதியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link கொரோனா வைரஸ் குறித்து கி.மு. 400 நூற்றாண்டில் வாழ்ந்த போகர் சித்தர் பாடல் எழுதியுள்ளார் என்று சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது என்று நாளிதழ் ஒன்று வெளியிட்ட நியூஸ் கிளிப் பகிரப்பட்டுள்ளது. அதில், “கொரோனா வைரஸ் குறித்து கி.மு. 400ம் நூற்றாண்டில் போகர் சித்தர் எழுதிய பாடல் […]

Continue Reading