இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்க காட்சி என்று பரவும் வீடியோ உண்மையா?

உலகச் செய்திகள் சமூக ஊடகம் சர்வதேசம்

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது பதிவான காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பயங்கர நிலநடுக்கத்தை ஆய்வாளர்கள் சிலர் உணர்வது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது பதிவான காட்சிகள்

இந்தோனேசியாவின் கரையோரப் பகுதியில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வீடியோ பதிவை ரைட் நியூஸ் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2023 ஜனவரி 10ம் தேதி பதிவிட்டுள்ளது. இதைப் போல பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்தோனேஷியாவில் ஜனவரி 9, 2023 அன்று இரவு பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவு கோலில் 7.7 ஆக பதிவானது என்றும் செய்திகள் வெளியானது. நிலநடுக்கம் இரவில் ஏற்பட்டது என்று செய்திகள் குறிப்பிட்டிருந்தன. ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ பட்டப்பகலில் எடுக்கப்பட்டுள்ளது. எனவே, சந்தேகத்தின் அடிப்படையில் இந்த வீடியோ இந்தோனேஷியாவில் ஜனவரி 9, 2023 அன்று எடுக்கப்பட்டதுதானா என்று ஆய்வு செய்தோம்.

Archive

வீடியோ காட்சியைப் புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி தைவானில் எடுக்கப்பட்டது என்று பல பதிவுகள் நமக்கு கிடைத்தன. Geology Notes என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த வீடியோ செப்டம்பர் 19, 2022 அன்று பதிவிடப்பட்டிருந்தது. அதில் தைவானில் செப்டம்பர் 18, 2022 அன்று 6.9 அளவுக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook 

இதன் மூலம் 2022ம் ஆண்டு தைவானில் பதிவான நிலநடுக்க வீடியோவை 2023 ஜனவரி 9, இந்தோனேஷிய நிலநடுக்கம் என்று தவறாகப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

இந்தோனேஷியாவில் ஜனவரி 9, 2023 அன்று ஏற்பட்ட நிலநடுக்க காட்சி என்று பரவும் வீடியோ 2022ல் தைவானில் பதிவு செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்க காட்சி என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply