
‘‘காரைக்குடி நகராட்சி மாமன்றத்தில் நடிகை திரிஷா புகைப்படம் வைக்கப்பட்டது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ காரைக்குடி நகராட்சி மாமன்றத்தில்
நடிகை த்ரிஷா படம்
இன்னும் என்னென்ன பார்க்க வேண்டி இருக்கோ
இதெல்லாம் பார்க்க நமக்கு தலையெழுத்து ,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
இதனுடன், புகைப்படம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.
Polimer News லோகோ உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது எடிட் செய்யப்பட்ட புகைப்படம், என்று தெரியவந்தது. இதுபற்றி தவெக., தலைமை அலுவலகத்தில் கேட்டபோது, ‘’இது வேண்டுமென்றே அரசியல் உள்நோக்கத்துடன் பகிரப்படும் வதந்தி,’’ என்று தெரிவித்தனர்.

தொடர்ந்து தகவல் தேடினோம். அதன்படி, காரைக்குடி நகராட்சி மாமன்ற கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அதில், முன்னாள் முதல்வர்கள் என்ற முறையில், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி மற்றும் மு.க.ஸ்டாலின் படங்களை நகராட்சி மாமன்றத்தில் வைக்க வேண்டும், என்று அதிமுக மற்றும் திமுக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. அப்போது, சுயேச்சை கவுன்சிலர் மெய்யர் என்பவர், நடிகை த்ரிஷா படத்தையும் இங்கே வைக்க வேண்டும், என்று வேடிக்கையாகக் கூறியுள்ளார். இதனால், மாமன்ற கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக, பல்வேறு ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், த்ரிஷா படம் இதுவரை அங்கு மாட்டப்படவில்லை.
ABP Nadu Link l Dailythanthi Link l Indian Express Link
ஆனால், இந்த செய்தி வைரல் செய்யப்படும் நிலையில், விளையாட்டுக்கு இவ்வாறு சொன்னதாக, சுயேச்சை கவுன்சிலர் மெய்யர் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை Photoshop Detector உதவியுடன் சரிபார்த்தோம். இது எடிட் செய்யப்பட்ட புகைப்படம், என்று தெளிவானது.

இறுதியாக, Polimer News வெளியிட்ட வீடியோ செய்தியில் இதுபோன்று எந்த படமும் இடம்பெறவில்லை, என்பதைக் கண்டோம்.

முழு வீடியோ லிங்க் இதோ…
இதன்மூலமாக, வேடிக்கைப் பேச்சை உண்மை போல திரித்து, எடிட் செய்த புகைப்படத்தை சேர்த்து, வதந்தி பரப்புகிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram


