
‘’கழுத்தில் சிலுவை அணிந்து, அமெரிக்கன் ஸ்கூல் சேர விண்ணப்பிக்கும் தவெக., தலைவர் விஜய் மகன்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ ஆங்கிலேயர்கள் படிக்கும் அமெரிக்கன் பள்ளியில் ஜோசப் விஜய்யின் மகனுக்கு எப்படி இடம் கிடைத்தது?
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்கள் படிக்கும் பள்ளி தான் அமெரிக்கன் ஸ்கூல்.
இதில் படிப்பதற்காக விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் UK குடியுரிமை பெற்றுள்ளாராம்.’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்று நமக்கு தெரியவந்தது. கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட், 28 அன்று, Lyca Productions தயாரிப்பில் விஜய் மகன் Jason Sanjay புதிய படம் ஒன்றை இயக்குவதாக, அறிவிப்பு வெளியானது. இதற்கான ஒப்பந்தத்தில் சஞ்சய் கையெழுத்திடும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையே இவ்வாறு எடிட் செய்து பரப்புகின்றனர்.
இதுதொடர்பாக, Lyca நிறுவனம் வெளியிட்ட பதிவு இதோ…
மேலும் சில செய்தி ஆதாரங்கள்…
The Hindu l Hindustan Times l India Today
உண்மையான புகைப்படத்தையும், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் ஒப்பீடு செய்து, கீழே இணைத்துள்ளோம்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம், எடிட் செய்யப்பட்ட ஒன்று, என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:கழுத்தில் சிலுவை; அமெரிக்கன் ஸ்கூல் விண்ணப்பம்… தவெக., விஜய் மகன் பற்றி பரவும் புகைப்படம் உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: ALTERED
