தாயின் அஸ்தியைக் கரைக்கும் மோடி என்று பரவும் வீடியோ உண்மையா?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

சமீபத்தில் மரணம் அடைந்த தன்னுடைய தாயாரின் அஸ்தியைப் பிரதமர் மோடி கரைக்கும் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பிரதமர் மோடி கையில் கலசத்துடன் ஆற்றில் இறங்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. பின்னணியில் தமிழ் சினிமா பாடல் ஒலிக்கிறது. நிலைத் தகவலில், “அம்மா அஸ்தியை சீக்கிரம் கரைச்சி விடுங்க ஜீ முன்னால தண்ணிக்குள்ள மூழ்கி படம் புடிக்கிற கேமராமேன் மூழ்கி செத்துர போறான்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ பதிவை Adhavan Madhu என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஜனவரி 4ம் தேதி பதிவிட்டுள்ளார். 

உண்மை அறிவோம்:

பிரதமர் மோடி தன்னுடைய தாயாரின் அஸ்தியை கரைப்பதாக வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கேமராமேன் தண்ணீரில் மூழ்கி செத்துவிடப் போகிறான் என்று பிரதமர் மோடியை நையாண்டி செய்துள்ளனர். இந்த வீடியோ பல மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடி கங்கை நதியில் நீராடிய காட்சி போல இருந்ததால் இந்த வீடியோவை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம்.

கூகுளில் பிரதமர் மோடி, கங்கை, வாரணாசி, புனித நீராடல் என்று சில கீ வார்த்தைகளை டைப் செய்து தேடினோம். அப்போது, 2021 டிசம்பர் 13ம் தேதி இதே வீடியோவை பல ஊடகங்களும் வெளியிட்டிருப்பது தெரிந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட காட்சிகள் அப்படியே DeshGujaratHD என்ற யூடியூப் பக்கம் வெளியிட்டிருந்த வீடியோவில் இருந்தது.

தொடர்ந்து தேடிய போது கங்கையில் புனித நீராடல் என்று பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் கூட 2021 டிசம்பர் 13ம் தேதி வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. அப்போது வெளியான செய்திகளும் நமக்குக் கிடைத்தன.

பிரதமர் மோடியின் தாயார் 2022 டிசம்பர் 30ம் தேதி மரணம் அடைந்தார். ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவோ 2021 டிசம்பர் 13ம் தேதி யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் பிரதமர் மோடி தன்னுடைய தாயாரின் அஸ்தியை கரைத்த வீடியோ என்று பரவும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

உண்மைப் பதிவைக் காண: hindustantimes.com I Archive

முடிவு:

பிரதமர் மோடி 2021ல் கங்கையில் நீராடிய வீடியோவை மோடி தன்னுடைய தாயரின் அஸ்தியை கரைத்த வீடியோ என்று தவறாக பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:தாயின் அஸ்தியைக் கரைக்கும் மோடி என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply