நெல்லையில் மது அருந்தும் பள்ளி மாணவிகள் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

அரசியல் சார்ந்தவை | Political தவறாக வழிநடத்துபவை I Misleading

‘‘நெல்லையில் மது அருந்தும் பள்ளி மாணவிகள்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ இது தமிழ்நாட்டு அப்பா ஸ்டாலின் அப்பா  அவர்களின் திராவிட டாஸ்மாக் மாடலுக்கு கிடைத்த வெற்றி.

நெல்லையில் பொது வெளியில் அமர்ந்து மது அருந்தும் பள்ளி மாணவிகள் வீடியோ வைரல்..!,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2 l Archived Link        

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது. 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இதுபோன்ற எந்த செய்தியும் சமீபத்தில் வெளியாகவில்லை, என்றும், இது கடந்த 2020ம் ஆண்டு வெளியான வீடியோ என்றும், தெரியவந்தது.  

இதன்படி, கடந்த 2020ம் ஆண்டு அரியலூர் பள்ளி மாணவிகள் மது அருந்தும் காட்சி என்று கூறி ஊடகங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டது. அப்போது, அதிமுக ஆட்சியே தமிழ்நாட்டில் நடைபெற்றது. அதேசமயம், இந்த வீடியோவை எடுத்து, திமுக ஆட்சியுடன் தொடர்புபடுத்தி 2024ம் ஆண்டு சமூக வலைதளங்களில் பாஜக நபர் ஒருவர் பரப்பினார். அவரை உடனே போலீசார் கைது செய்தனர்.

இதே வீடியோவை எடுத்து, உண்மை விவரம் தெரியாமல், மீண்டும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, வதந்தி பரப்புகிறார்கள், என்று தெளிவாகிறது. 

Dailythanthi l Vikatan l One India Tamil 

எனவே, பழைய வீடியோவை எடுத்து, புதியது போன்று தற்போது பரப்புகிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:நெல்லையில் மது அருந்தும் பள்ளி மாணவிகள் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

Fact Check By: Pankaj Iyer  

Result: Misleading

Leave a Reply