உச்ச நீதிமன்றத்தை விமர்சித்து பிரசாந்த் பூஷன் ட்விட்டரில் பகிர்ந்த கார்ட்டூன் இதுவா?

அரசியல் சார்ந்தவை இந்தியா சமூக ஊடகம்

‘’உச்ச நீதிமன்றத்தை விமர்சித்து பிரசாந்த் பூஷன் ட்விட்டரில் வெளியிட்ட கார்ட்டூன்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link

குறிப்பிட்ட ஸ்கிரின்ஷாட்டை நமக்கு வாசகர் ஒருவர் 9049053770 என்ற வாட்ஸ்ஆப் சாட்போட் எண் வழியே அனுப்பி, உண்மையா என கேட்டிருந்தார்.

உண்மை அறிவோம்:
இந்த கார்ட்டூனில் அமெரிக்காவில் செயல்படும் ரிபப்ளிக் கட்சியின் சின்னம் (யானை) இடம்பெற்றுள்ளதை நன்கு கவனித்தால் அறிந்துகொள்ளலாம். இதன்மூலமாக, இந்த கார்ட்டூன் அடிப்படையிலேயே இந்தியாவை தொடர்புபடுத்தி தயாரிக்கப்பட்டது இல்லை என்று தெரிகிறது. இதில் உள்ள RSS, BJP என்ற எழுத்துகள் மட்டும் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளன.

அமெரிக்க அரசியலை விமர்சித்து Bruce Mackinnon என்பவர் இந்த கார்ட்டூனை வெளியிட்டார். இதுபற்றி பல்வேறு ஊடகங்களிலும் அப்போதே செய்தி வெளியாகியுள்ளது. 

ThePrint Article Link I GlobalNews Article Link

இந்த கார்ட்டூனை சிலர் எடுத்து, இந்திய அரசியலுக்கேற்ப RSS, BJP என்ற எழுத்துகளை சேர்த்து, தற்போது பகிர்ந்து வருகிறார்கள். ஆனால், இதனை பிரசாந்த் பூஷன் பகிரவில்லை. அவரது ட்விட்டர் பக்கத்தில் இதுபற்றி விரிவாக தேடிப் பார்த்தபோது, இப்படி எந்த கார்ட்டூனும் அவர் பகிரவில்லை என்று தெரியவருகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram 

Avatar

Title:உச்ச நீதிமன்றத்தை விமர்சித்து பிரசாந்த் பூஷன் ட்விட்டரில் பகிர்ந்த கார்ட்டூன் இதுவா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: False