மைனஸ் 15 டிகிரி குளிரில் தவம் செய்யும் இந்து மத துறவிகள் என்று பரவும் வீடியோ உண்மையா?

False அரசியல் சார்ந்தவை | Political தமிழகம் | Tamil Nadu

‘‘மைனஸ் 15 டிகிரி குளிரில் தவம் செய்யும் இந்து மத துறவிகள்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ 🚩இந்து மதம் எங்கே.. 🚩

🚩உங்கள் கடவுள் எங்கே?.. 🚩

🚩”நீங்கள் அவரைப் பார்த்தீர்களா?”

“போன்ற பைத்தியக்காரத்தனமான கேள்விகளைக் கேட்பவர்களுக்கு இந்த வீடியோ”.. 👇

🚩மைனஸ் 15 டிகிரி குளிரில் ஒருவர் எவ்வளவு நேரம் இருக்க முடியும்?..

அது துணி இல்லாமல்.. இது ஒரு அதிசயம்… இது மகாதேவின் சக்தி…🚩 இவ்வளவு குளிரில் இரத்தம் உறைவதில்லை?.. 🚩

பதிலளிக்க முடியாத பல கேள்விகள் உள்ளன.. பதில் ஒன்றுதான்: 🙏🕉️🙏

ஹரஹர மகாதேவ் ஷம்போ சங்கரா 🙏

ஓம் நமஷ் சிவாய 🙏🕉️🙏

Jai Bharat . . 🇮🇳

Jai Hindustani . . 🚩,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் இந்து மத சாதுக்கள் சட்டை இல்லாமல் குளிரில் தவம் செய்வது போன்ற காட்சிகள் கொண்ட வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.  

Claim Link 1 l Claim Link 2 l Archived Link        

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது. 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். Google Reverse உதவியுடன் தகவல் தேடியபோது, இது AI முறையில் தயாரிக்கப்பட்ட வீடியோ என்றும், உண்மையானதல்ல என்றும் தெரியவந்தது. 

MIND GROW G என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த வீடியோ முதல்முறையாக பகிரப்பட்டுள்ளது. அதில் ‘’ ⚠️Disclaimer :~This video is a fictionalentertainment
video created using AI/VFX. No humans or animals have been harmed This video is not based on anyreal incident,’’ என்று கேப்ஷன் எழுதப்பட்டுள்ளது.  

குறிப்பிட்ட ஃபேஸ்புக் பக்கத்தில் இதுபோன்று நிறைய வீடியோ பகிரப்பட்டுள்ளன. 

மேலும், -20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் தவம் செய்யும் துறவி என்றும் கூறி ஒரு வீடியோ இதே ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதுவும் AI முறையில் தயாரிக்கப்பட்ட வீடியோதான்…

MIND GROW G முகப்பு பக்கத்திலேயே பொழுதுபோக்கு நோக்கில் இந்த வீடியோக்கள் பகிரப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இறுதியாக, facebook messenger மூலமாக, MIND GROW G தரப்பை தொடர்புகொண்டு, விளக்கம் கேட்டோம். ‘’தொழில்முறை நோக்கில் பிரத்யேக AI tools பயன்படுத்தி இதுபோன்று வீடியோ தயாரித்து வெளியிடுகிறோம்,’’ என்று தெரிவித்தனர். 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ AI முறையில் தயாரிக்கப்பட்டது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Avatar

Title:மைனஸ் 15 டிகிரி குளிரில் தவம் செய்யும் இந்து மத துறவிகள் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

Leave a Reply