‘ஜனநாயகன் விவகாரத்தில் கைது’ என்று உதயநிதி புகைப்படத்துடன் பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

Altered அரசியல் சார்ந்தவை | Political தமிழகம் | Tamil Nadu

ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் கசிந்தது தொடர்பாக 6 பேர் கைது என்று உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்துடன் ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “ஜனநாயகன் விவகாரம்: 6 பேர் கைது. விஜயின் ஜனநாயகன் படம் கசிந்த விவகாரத்தில் 6 பேரை கைது செய்து தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் விசாரணை. திரைத் துறையினர் உட்பட பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. திரைப்படத்தை தயாரித்தவர்கள் தரப்பிலிருந்தே படம் வெளியாகி இருக்கலாம் என்று பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் அல்லது உதயநிதி ஸ்டாலினுக்கு தெரிந்தவர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டது போன்று அவர்களது புகைப்படத்தை வைத்து பலரும் நியூஸ் கார்டு ஒன்றை சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். 

கைது செய்யப்பட்டவர்களின் விவரத்தை காவல் துறை வெளியிடாத நிலையில் இந்த புகைப்படம் கைது செய்யப்பட்டவர்கள் தி.மு.க-வினர் என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே, இந்த நியூஸ் கார்டு உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம். கைது செய்யப்பட்டவர்கள் பற்றிய விவரம் ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடிய போது, அப்படி எதுவும் நமக்கு கிடைக்கவில்லை. காவல் துறையினர் ரகசியமாக தீவிர விசாரணை நடத்தி வருவதாக தகவல் கிடைத்தது.

இந்த நியூஸ் கார்டை புதிய தலைமுறை வெளியிட்டதா என்று அறிய அதன் சமூக ஊடக பக்கங்களைப் பார்வையிட்டோம். 6 பேர் கைது செய்யப்பட்டது தொடர்பாக புதிய தலைமுறை நியூஸ் கார்டு வெளியிட்டிருந்தது. ஆனால் அதில் உதயநிதி ஸ்டாலின் புகைப்படம் இல்லை. நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தில் வரும் காட்சியுடன் அந்த நியூஸ் கார்டை வெளியிட்டிருந்தனர். இதை எடிட் செய்து தவறாக வதந்தி பரப்பியிருப்பது தௌிவானது.

உண்மைப் பதிவைக் காண: puthiyathalaimurai.com I Archive

இதை உறுதி செய்துகொள்ள புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளருக்கு இதை அனுப்பினோம். அவரும் இது போலியானது என்று குறிப்பிட்டு, இதை புதிய தலைமுறை வெளியிடவில்லை என்று வெளியிட்ட பதிவை நமக்கு அனுப்பினார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ஜனநாயகன் படம் இணைத்தில் வெளியானது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டதாக உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்துடன் பரவும் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

FacebookI X PostI Google News ChannelI Instagram

Result Stamp

Title: ‘ஜனநாயகன் விவகாரத்தில் கைது’ என்று உதயநிதி புகைப்படத்துடன் பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

Written By: Chendur Pandian

Result: Altered

Leave a Reply