FactCheck: பாஜக.,வினர் காசு கொடுத்து புகைப்படம் எடுக்கலாம் என்று தலித் வீட்டில் எழுதப்பட்டதா?

அரசியல் இந்தியா தமிழ்நாடு

‘’தலித் வீட்டில் பாஜகவினர் சாப்பிட வரலாம், புகைப்படம், வீடியோ எடுக்க கட்டணம் ரூ.500,’’ என்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப்பில் அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தார். இதன்பேரில், தகவல் தேடியபோது, பலரும் ஃபேஸ்புக்கில் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம்.

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
இவர்கள் பகிரும் புகைப்படம் உண்மையில் எடிட் செய்த ஒன்றாகும். இது கடந்த 2017ல் ஏழ்மை நிலையில் இருந்து, கஷ்டப்பட்டு படித்து, ஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்ற நெய்வேலியை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் வீடாகும். அதுபற்றி வலைதளம் ஒன்றில் நேர்காணல் செய்து, அவரை பற்றியும், அவரது வீடு பற்றியும் செய்தி வெளியிட்டிருந்தனர்.

Manikandan IAS interview Link I Asianet Tamil Link I Yourstory.com Link

இதில் உள்ள புகைப்படத்தை எடுத்து, எடிட் செய்து, மேற்கண்ட வகையில் வதந்தி பரப்பி வருகின்றனர் என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:பாஜக.,வினர் காசு கொடுத்து புகைப்படம் எடுக்கலாம் என்று தலித் வீட்டில் எழுதப்பட்டதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Altered

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply