‘’தமிழ்நாட்டில் அசைவ விற்பனை கூடாது’’ என்று அண்ணாமலை கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

Claim Link l Archived Link

ஜூனியர் விகடன் லோகோ உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அயோத்தியில் புதியதாக, ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. அதில், ராம் லல்லா சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது.

The Hindu Link

இதையொட்டி, சமூக வலைதளங்களில் ஆதரவு, எதிர்ப்பு பதிவுகள் ஒருசேர பகிரப்படுகின்றன. அந்த வரிசையில் பகிரப்படும் ஒரு வதந்திதான் மேற்கண்ட பதிவும்.

ஆம், உண்மையில் இவ்வாறு ஜூனியர் விகடன் ஊடகம் எந்த செய்தியும் வெளியிடவில்லை. இதுதொடர்பாக, அவர்களது டிஜிட்டல் பிரிவு நிர்வாகியை தொடர்பு கொண்டு பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.

இதேபோன்று, பாஜக ஐ.டி. பிரிவு தரப்பிலும் பேசியுள்ளோம்.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தி தவறானது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:‘தமிழ்நாட்டில் அசைவ விற்பனை கூடாது’ என்று அண்ணாமலை கூறினாரா?

Written By: Fact Crescendo Team

Result: False