பெங்களூருவில் மேக வெடிப்பு காரணமாக மழை பெய்த காட்சி என்று பரவும் வீடியோ உண்மையா?

அறிவியல் இந்தியா சமூக ஊடகம்

பெங்களூரு நகரில் மேக வெடிப்பு காரணமாக மழை பெய்ததை வீடியோ என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

மேகத்திலிருந்து மழை கொட்டும் காட்சி பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மேக வெடிப்பு மழை பெங்களூரில் நேற்று” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ பதிவை K Abubakkar Siddiq Siddiq என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 செப்டம்பர் 9ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் கன மழை பெய்தது. இதனால், சாலை, குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கியது. வரலாறு காணாத அளவுக்கு மழை பொழிந்ததால் இந்த நிலையில், பெங்களூருவில் மேக வெடிப்பு காரணமாக மழை பெய்தது என்றும், அதன் வீடியோ என்றும் குறிப்பிட்டு சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வீடியோ உண்மையா என்று பார்த்தோம்.

வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். இந்த வீடியோ கடந்த சில மாதங்களாக டிக்டாக்கில் பயன்படுத்தப்பட்டு வந்திருப்பது தெரிந்தது. இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்டுள்ளது என்பதால் அதில் நம்மால் தேட முடியவில்லை. reddit.com தளத்தில் இந்த வீடியோ இருப்பதாக தெரிந்தது. அந்த தளத்துக்கு சென்று பார்த்தோம். கடந்த 2022 ஆகஸ்ட் 8ம் தேதி இந்த வீடியோவை அதில் பதிவேற்றம் செய்திருந்தனர். ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் மழை என்று குறிப்பிட்டிருந்தனர். 

அது மட்டுமின்றி சில ட்விட்டர் அக்கவுண்ட்களில் 2022 ஆகஸ்ட் முதல் வாரத்தில் இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அவற்றிலும் இது ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்தது என்று குறிப்பிட்டிருந்தனர். பெங்களூருவில் மழை வெள்ளம் ஏற்பட்டது 2022 செப்டம்பர் முதல் வாரத்தில்… அதற்கு ஒரு மாதத்துக்கு முன்னதாக இந்த வீடியோ இணையத்தில் பதிவேற்றம் செய்திருப்பதன் மூலம் இந்த வீடியோ பெங்களூருவில் எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியானது.

Archive

yandex.com தளத்தில் இந்த படங்களை பதிவேற்றித் தேடினோம். ரஷ்ய மொழியில் வெளியான பதிவு இன்றில் இதன் முழு வீடியோவையும் வெளியிட்டிருந்தனர். அதுவும் 2020ம் ஆண்டில். அது மட்டுமின்றி வானிலை ஆய்வு தொடர்பான இணைய தளம் ஒன்றில், ஆஸ்திரேலியாவில் பெர்த் நகரில் மழை பொழி ஏற்பட்ட காட்சியை டைம் – லாப்ஸ் (Time-Lapse) வீடியோ எடுத்துள்ளனர் என்று குறிப்பிட்டு 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி இந்த வீடியோவை பதிவேற்றம் செய்திருப்பதைக் காண முடிந்தது. அந்த வீடியோவில் இது 2020 பிப்ரவரி 25ம் தேதி பெர்த் நகரில் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 

உண்மைப் பதிவைக் காண: weather.com I Archive

தேதி, இடம் உள்ள பகுதி மட்டும் அகற்றப்பட்டு, பெங்களூருவில் மேக வெடிப்பு காரணமாக மழை பொழிந்த காட்சி என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது தெளிவானது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

மேக வெடிப்பு காரணமாக பெங்களூருவில் மழை பெய்த காட்சி என்று பரவும் வீடியோ ஆஸ்திரேலியாவில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பெங்களூருவில் மேக வெடிப்பு காரணமாக மழை பெய்த காட்சி என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply