‘’இந்தியர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் வருவதற்கும், கோமியம் குடிப்பதற்கும் தொடர்பு உள்ளதாக பிபிசி செய்தி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

மேற்கண்ட செய்தியை வாசகர் ஒருவர் நமக்கு, +91 9049053770 என்ற வாட்ஸ்ஆப் சாட்போட் வழியாக, நமக்கு அனுப்பியிருந்தார். இதன்பேரில், நாமும் தகவல் தேடியபோது, ட்விட்டர், ஃபேஸ்புக்கில் பலரும் இதனை உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்வதைக் கண்டோம்.

Facebook Claim LinkArchived Link 1
Twitter Claim LinkArchived Link 2

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட பிபிசி செய்தியை ஒருமுறை நன்கு கவனித்தால், அதில் உள்ள ஃபாண்ட் மற்றும் வாக்கிய அமைப்பு அனைத்தும் உண்மையிலேயே பிபிசிதான் இதனை வெளியிட்டதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதை உணரலாம்.

அதேசமயம், சமீபத்தில் பிபிசி இப்படி எதுவும் செய்தி வெளியிட்டுள்ளதா என்று தகவல் தேடியபோது, அவர்கள் வெளியிட்ட உண்மைச் செய்தியை காண முடிந்தது. அதன் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

BBC Link

எனவே, மேற்கண்ட செய்தியை அடிப்படையாக வைத்து, ஃபாண்ட், வாக்கியங்களை மாற்றி, இத்தகைய போலிச் செய்தி உருவாக்கியுள்ளனர் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.

மேலும், நாம் தகவல் தேடியபோது, பிபிசி இப்படி எந்த செய்தியும் சமீபத்தில் வெளியிடவில்லை என்று தெரியவந்தது. அவர்கள் இதுபற்றி ஊடகத்திற்கும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

TheQuint Link

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:கோமியம் குடித்தால் கருப்பு பூஞ்சை நோய் வரும் என்று பிபிசி செய்தி வெளியிட்டதா?

Fact Check By: Pankaj Iyer

Result: False