நாட்டிலே மதக் கலவரம் செய்திட வாக்களிப்பீர் பாஜக என பகிரப்படும் வதந்தி…

இந்தியா சமூக ஊடகம் தமிழ்நாடு

‘’நாட்டிலே மதக் கலவரம் செய்தட வாக்களிப்பீர் பாஜக,’’ என்று கூறி பகிரப்படும் போஸ்டர் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link

இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட போஸ்டரை பார்த்தாலே, பாஜக.,வை கேலி செய்யும் நோக்கில் பகிரப்படும் போலியான ஒன்று என தெரிகிறது. இருந்தாலும், பலர் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்வதால், சந்தேகத்தின் பேரில் பாஜக ஐ.டி.பிரிவை தரப்பை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். அவர்களும் இது போலியான ஒன்றுதான் என்பதை உறுதி செய்தனர்.

தமிழ்நாட்டில் தற்போது உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது. அதேசமயம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் பாஜக ஆதரவாளர்கள் சிறுபான்மையினத்தவருக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக, சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டப்படுகிறது.

இந்த பின்னணியில் மேற்கண்ட வகையில் போலியான போஸ்டரை சிலர் தயாரித்து பகிர்ந்து வருகின்றனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:நாட்டிலே மதக் கலவரம் செய்திட வாக்களிப்பீர் பாஜக என பகிரப்படும் வதந்தி…

Fact Check By: Pankaj Iyer 

Result: False