தமிழ்நாடு முதலமைச்சர் பதவியை விட்டு விலக தயார் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா?

இந்தியா சமூக ஊடகம் தமிழ்நாடு

சமூக நீதியை காக்க தமிழ்நாடு முதலமைச்சர் பதவியை விட்டு விலக தயார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக, ஒரு செய்தி பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
மருத்துவப் படிப்புகளுக்காக நடத்தப்படும் நீட் தேர்வுக்கு தமிழ்நாடு போன்ற மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனினும், மத்திய அரசு இதனை கண்டும் காணாதது போல செயல்படுவதாக, கல்வி ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த சூழலில், நீட் தேர்வு விலக்கு மசோதா ஒன்றை தமிழ்நாடு சட்டமன்றத்தில் திமுக அரசு சார்பாக நிறைவேற்றி, அதனை ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், இதனை ஆளுநர் சி.என்.ரவி திருப்பி அனுப்பி விட்டார்.

Hindu Tamil Link

இதற்கு கண்டனம் வலுத்து வரும் நிலையில், மீண்டும் அதே தீர்மானத்தை தமிழ்நாடு அரசு தற்போது சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.

Maalaimalar Link I News 18 Tamil Link

இந்த பின்னணியில், தமிழ்நாடு முதலமைச்சர் பதவியில் இருந்து விலகி, சமூக நீதியை காப்பேன் என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக, மேற்கண்ட வகையில் சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர். ஆனால், ‘’இது உண்மையானதல்ல, எங்களது பெயரில் பகிரப்படும் வதந்தி,’’ என்று சன் நியூஸ் டிஜிட்டல் பிரிவு தரப்பில் விளக்கம் அளித்துள்ளனர்.

எனவே, இது போலியான செய்தி என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:தமிழ்நாடு முதலமைச்சர் பதவியை விட்டு விலக தயார் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False