‘‘சென்னை நொச்சிக்குப்பத்தில் திமுக அரசால் இடிக்கப்பட்ட மீன் கடைகள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

Tweet Claim Link l Archived Link

பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சமீபத்தில் சென்னை மெரீனா கடற்கரை லூப் சாலையில் (நொச்சிக்குப்பம்) ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகக் கூறி ஏராளமான மீன் கடைகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியது. இதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

hindutamil link l maalaimalar link

இந்த சூழலில்தான் மேற்கண்ட புகைப்படத்தை சிலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, சென்னை நொச்சிக்குப்பத்தில் இடிக்கப்பட்ட மீன் கடைகள் என்று குறிப்பிட்டு வருகின்றனர். ஆனால், இது பழைய புகைப்படமாகும்.

ஆம். கூகுள் உதவியுடன் நாம் குறிப்பிட்ட புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தபோது, இது 2019ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒன்று என தெரியவந்தது.

livechennai link l timesofindia link

எனவே, 2019ம் ஆண்டு முதலே பகிரப்பட்டு வரும் புகைப்படம் ஒன்றை எடுத்து தற்போது நிகழ்ந்தது போலக் குறிப்பிட்டு வதந்தி பரப்பி வருகிறார்கள் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:சென்னை நொச்சிக்குப்பத்தில் திமுக அரசால் இடிக்கப்பட்ட மீன் கடைகள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Fact Crescendo Team

Result: False