ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாமில் குழந்தைகள் சித்ரவதை என்று பரவும் வீடியோ உண்மையா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

‘’ ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாமில் குழந்தைகள் சித்ரவதை’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

Facebook Claim Link l Archived Link 

இந்த வீடியோவில் காவி வேட்டி அணிந்த சிறுவர்கள் நின்று கொண்டு இருக்கின்றனர். ஒருவர் ஒரு சிறுவனை கன்னத்தில் அறைந்து பின்னர் கம்பு வைத்து கடுமையாகத் தாக்குகிறார்.

பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.  

உண்மை அறிவோம்:

மேற்கண்ட செய்தி உண்மையா என்று நாம் தகவல் தேடியபோது, இந்தி ஊடகம் ஒன்றில் வெளியான செய்தி விவரம் கிடைத்தது. அதனை தமிழில் மொழி மாற்றம் செய்து பார்த்தபோது, ‘’சீதாபூர்: போதேபூரின் சமஸ்கிருதி பீத் வித்யா மந்திரில் மாணவனை அடித்த ஆசிரியர், குருகுலத்தில் படிக்கும் மாணவனை அடித்த ஆசிரியர், சில பிரச்னையால் மாணவனை சதீஷ் ஜோஷி அடித்த வீடியோ வைரலாகி வருகிறது,’’ என்று தெரியவந்தது. 

அந்த X தள பதிவு கீழே தரப்பட்டுள்ளது. 

தொடர்ந்து, இந்த வீடியோவில் உள்ள ஆசிரியர் கைது செய்யப்பட்டுவிட்டதாகவும், அதே ஊடகம் மற்றொரு பதிவு வெளியிட்டதையும் கண்டோம். 

இதன்படி, உத்தரப் பிரதேச மாநிலம், சீதாப்பூர் மாவட்டத்தில் உள்ள சித்தௌலி என்ற பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக, தெரியவருகிறது. சமஸ்கிருத பள்ளி மாணவனை ஆசிரியர் இவ்வாறு கடுமையாக தாக்கியுள்ளார். 

இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட சீதாப்பூர் மாவட்ட போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். அதனையும் கீழே இணைத்துள்ளோம். 

கூடுதல் ஆதாரத்திற்காக, நாம் Sidhauli காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு நேரடியாகப் பேசினோம். நம்மிடம் பேசிய அதிகாரி ஒருவர், ‘’இந்த விவகாரத்தில் தொடர்புடைய சமஸ்கிருத ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். எஃப்ஐஆர் கூட பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதில் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எந்த வகையிலும் தொடர்பில்லை,’’ என்றார்.  

எனவே, தவறான வீடியோ ஒன்றை எடுத்து, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் இவ்வாறு செய்வதாகக் குறிப்பிட்டு, வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.  

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram 

Avatar

Title:ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாமில் குழந்தைகள் சித்ரவதை என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Fact Crescendo Team 

Result: False