
‘‘வாயை திறந்தார் உதயநிதி’’ என்று சன் நியூஸ் செய்தி வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ வாயை திறந்தார் உதயநிதி இன்று.. 2021 திமுகவின் 5 ஆண்டு ஆட்சியில் 2000-க்கு மேற்பட்ட கற்பழிப்பு வழக்குகள் 5000-க்கு மேற்பட்ட போக்சோ வழக்குகள்.. இதைப் பற்றி அந்த ஆட்சியில் கண்டுகொள்ளாமல் இன்று எதிர்க்கட்சி ஆனதும் பெண் பாதுகாப்பு பற்றி பேசியிருக்கிறார்’’, என்று எழுதப்பட்டுள்ளது.
Claim Link 1 l Claim Link 2 l Archived Link
சன் நியூஸ் லோகோ உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது வேண்டுமென்றே எடிட் செய்து, பகிரப்படும் நியூஸ் கார்டு, என்று தெரியவந்தது.

இதன்படி, கடந்த மே மாதம் 23, 2026 அன்று ‘’ “கோவையில் 10 வயது சிறுமி, கடத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது..” -எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்.,’’ எனும் தலைப்பில் சன் நியூஸ் வெளியிட்ட கார்டை எடுத்தே, எடிட் செய்து, தவறான தகவல் பரப்புகிறார்கள், என்று நமக்கு தெளிவாகிறது.
இதுதொடர்பாக, உதயநிதி ஸ்டாலின் அவரது அதிகாரப்பூர்வ X வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவு இதோ…
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram


