ரஃபேல் விமானத்துக்கு எரிபொருள் நிரப்பும் காட்சி- தவறான வீடியோ!

இந்தியா சமூக ஊடகம் சர்வதேசம்

ரஃபேல் போர் விமானத்துக்கு எரிபொருள் நிரப்பும் வீடியோ, என்று கூறி சில விநாடிகள் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

எரிபொருள் டேங்கர் விமானத்தில் இருந்து மற்றொரு விமானத்துக்கு எரிபொருள் நிரப்பப்படும் வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பூமியில் இருந்து 30000அடி உயரத்தில் ரஃபேல் விமானத்திற்கு எரிபொருள் நிரப்பப்படும் காட்சி….!” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை நமது அந்தியூர் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 ஜூலை 31ம் தேதி பகிர்ந்துள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பிரான்ஸ் நாட்டிடமிருந்து முதல் கட்டமாக ஐந்து ரஃபேல் விமானங்கள் இந்தியாவுக்கு வந்துள்ளன. இந்திய ராணுவத்தின் பலம் இதன் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்த ரஃபேல் விமானங்களுக்கு வரும் வழியில் எரிபொருள் நிரப்பும் பொறுப்பை பிரான்ஸ் ஏற்றுக் கொண்டது. அந்த நாட்டு டேங்கர் விமானம் மூலம் ரஃபேலுக்கு எரிபொருள் நிரப்பப்பட்டது தொடர்பான படங்களை இந்திய விமானப்படை வெளியிட்டது. வீடியோ எதையும் வெளியிட்டது போன்ற செய்தி இல்லை.

Archived Link

இந்த நிலையில், ரஃபேல் விமானத்துக்கு வானத்தில் எரிபொருள் நிரப்பப்படும் காட்சி என்று வீடியோ ஒன்றை பகிர்ந்து வருகின்றனர். இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது இது தொடர்பாக, பல ஆண்டுகளாக வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதைக் காண முடிந்தது. இதன் மூலம் இது சமீபத்தில் இந்தியா வந்த போது எடுத்த ரஃபேல் விமான வீடியோ இல்லை என்று தெரிந்தது.

இருப்பினும் இந்த விமானம் ரஃபேல் வகையைச் சார்ந்தது தானா என்று கண்டறியும் ஆய்வைத் தொடர்ந்தோம். நீண்ட தேடலுக்குப் பிறகு பிரேசில் நாட்டு விமானப்படை தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

அதில், “பிரேசில் விமானப்படையின் எஃப்-5 ஃபைட்டர் விமானத்துக்கு கடற்படை ஏ-4 விமானம் மூலம் எரிபொருள் நிரப்பப்படுகிறது எனக் குறிப்பிட்டிருந்தனர். இந்த வீடியோவை 2018 செப்டம்பர் மாதம் வெளியிட்டிருந்தனர்.

Archived Link

ஃஎப்-5 ஃபைட்டர் என்பது எந்த வகை விமானம் என்று ஆய்வு செய்தோம். இது பிரான்ஸ் தயாரிப்பு இல்லை, அமெரிக்க தயாரிப்பு போர் விமானம் என்பது தெரிந்தது. இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையுடன் தவறான தகவலும் சேர்த்து பகிரப்பட்டுள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:ரஃபேல் விமானத்துக்கு எரிபொருள் நிரப்பும் காட்சி- தவறான வீடியோ!

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •