திமுக GenZ கருத்தரங்கு நடத்தும் குழுவினருக்கு உதயநிதி ஸ்டாலின் மது விருந்து அளித்தாரா?

Altered அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India

‘‘திமுக GenZ கருத்தரங்கு நடத்தும் குழுவினருக்கு மது விருந்து அளித்த உதயநிதி ஸ்டாலின்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ நல்லா இருக்குடா meet up உபிஸ் 🤣😡
GenZ meetup நடத்தும் குழுவினரை அழைத்து மது விருந்து வைத்த உதய்😌🤭,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கையில் மது பாட்டில் வைத்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2 l Archived Link      

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது. 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது அரசியல் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே எடிட் செய்து, பகிரப்படும் புகைப்படம், என்று தெரியவந்தது. 

இதன்படி, Sri Hari என்பவர் கடந்த ஜூலை 4, 2026 அன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘உதயநிதி ஸ்டாலினுடன் சந்திப்பு’ என்று கூறி, புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை எடிட் செய்து, இவர்களின் கையில் மதுபாட்டில் உள்ளதுபோன்று வதந்தி பரப்பப்படுகிறது. 

கூடுதல் ஆதாரத்திற்காக, திமுக ஐடி பிரிவு தரப்பிலும் பேசி, உறுதிப்படுத்தியுள்ளோம். 

 இதன்மூலமாக, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் எடிட் செய்யப்பட்டது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Result Stamp

Title: திமுக GenZ கருத்தரங்கு நடத்தும் குழுவினருக்கு உதயநிதி ஸ்டாலின் மது விருந்து அளித்தாரா?

Fact Check By: Pankaj Iyer

Result: Altered

Leave a Reply