பறக்க முயன்ற கோயில் பூசாரி மரணம் என்று பரவும் வீடியோ உண்மையா?

False அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India

‘‘பறக்க முயன்ற கோயில் பூசாரி மரணம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ ஆந்திர மாநிலத்தில் பறப்பதாக கூறி மலையில் இருந்து குதித்த சாமியார் மரணம். நம்பிக்கை இருக்கட்டும்… ஆனால் உயிரைப் பணயம் வைக்கும் அளவுக்கு அல்ல. குருட்டு நம்பிக்கை சில நேரங்களில் திரும்பப் பெற முடியாத இழப்பை ஏற்படுத்திவிடும். 💔,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2 l Archived Link      

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது. 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது கடந்த 2021ம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோ என்றும், குறிப்பிட்ட பூசாரி பறக்க முயற்சிக்கவில்லை; பூஜை செய்யும்போது கால் தவறி மலையில் இருந்து விழுந்தார், என்றும் தெரியவந்தது. 

இதன்படி, கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 21 அன்று, ஆந்திராவில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தின் சிங்கனமலா பகுதியில் உள்ள கம்ப மல்லையா சுவாமி என்ற மலைக் கோயிலில் ஸ்ராவனா மாத சிறப்பு பூஜை நடைபெற்றது. அந்த கோயில் பூசாரி ‘அப்பா பாப்பையா’ (49 வயது), ஒரு கையில் மணியும், மறு கையில் ஆரத்தி தட்டும் ஏந்தி பூஜை செய்துள்ளார். அப்போது, கால் தடுமாறி மலையில் இருந்து கீழே விழுந்து, இறந்தார். 

இதனை சம்பந்தப்பட்ட பகுதி போலீசாரும் FIR மூலமாக உறுதிப்படுத்தியுள்ளனர். 

கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…

ANI Link l Zee News Link l TOI Link

இதன்மூலமாக, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ பற்றிய தகவல் தவறானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Result Stamp

Title: பறக்க முயன்ற கோயில் பூசாரி மரணம் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Pankaj Iyer

Result: False

Leave a Reply