ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் ஒன்று சேர்ந்து புதிய கட்சிக் கொடியை அறிமுகம் செய்தனரா?

False அரசியல் சார்ந்தவை | Political தமிழகம் | Tamil Nadu

‘‘ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் ஒன்று சேர்ந்து புதிய கட்சிக் கொடியை அறிமுகம் செய்த காட்சி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதனுடன் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் ஒன்று சேர்ந்து புதிய கட்சிக் கொடி ஒன்றை வெளியிடுவது போன்ற புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது. 

Claim Link l Archived Link      

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது. 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது எடிட் செய்து, பகிரப்படும் புகைப்படம், என்று தெரியவந்தது. 

இதுதொடர்பாக, புதிய தலைமுறை ஊடகத்திலும் பேசி, உறுதிப்படுத்தியுள்ளோம். 

தனுஷ், தனது ரசிகர் மன்றக் கொடியை சமீபத்தில் அறிமுகப்படுத்தியதாக, செய்திகள் காணக்கிடைத்தன. 

மற்றபடி, அவர் கட்சி தொடங்கியதாக, எந்த தகவலும் காணப்படவில்லை. எனவே, தனுஷ் மற்றும் ரஜினிகாந்த் பற்றி போலியான புகைப்படத்தை பரப்புகிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Result Stamp

Title: ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் ஒன்று சேர்ந்து புதிய கட்சிக் கொடியை அறிமுகம் செய்தனரா?

Fact Check By: Pankaj Iyer

Result: False

Leave a Reply