மதுரை மீனாட்சி அம்மன் கோயில் புகைப்படம் இதுவா?

ஆன்மீகம் தமிழகம்

‘’மதுரை மீனாட்சி அம்மன் கோயில் புகைப்படம்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

அஜித் குமார் எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை ஜூன் 5, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இது உண்மையான ஐடி என்ற சந்தேகம் ஒருபுறமிருக்க, இந்த பதிவை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட புகைப்படத்தை பலர் உண்மை என நம்பி ஷேர் செய்யும் அதே வேளையில், அது திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் புகைப்படம் எனக் கூறி ஒருவர் கமெண்ட் பகிர்ந்திருந்ததையும் காண முடிந்தது. 

இதன்படி, மேற்கண்ட புகைப்படத்தை கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இது திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கநாத சுவாமி கோயில் என்பதை உறுதிப்படுத்துவதற்கான விவரம் கிடைத்தது. 

இதையடுத்து, உண்மையான மதுரை மீனாட்சி அம்மன் கோயில் எப்படி இருக்கும் என்பதற்கான புகைப்பட ஆதாரங்களை தேடினோம். அப்போது, மீனாட்சி அம்மன் கோயில் நாற்புற கோபுரங்கள் வைத்து சதுக்கம்போல இருப்பதாக விவரம் கிடைத்தது. 

இதுதவிர, மீனாட்சி அம்மன் கோயில் எப்படி இருக்கும் என்பதற்கான வீடியோ ஆதாரமும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,

1) மேற்கண்ட புகைப்படத்தில் இருப்பது மீனாட்சி அம்மன் கோயில் கிடையாது.
2) திருச்சி ஸ்ரீரங்கநாத சுவாமி கோயில் புகைப்படத்தை பகிர்ந்து, இதுதான் மீனாட்சி அம்மன் கோயில் என தவறான வதந்தி பரப்பியுள்ளனர்.

முடிவு:
உரிய ஆதாரங்களின் படி நாம் ஆய்வு செய்த புகைப்படம் பற்றிய தகவல் தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:மதுரை மீனாட்சி அம்மன் கோயில் புகைப்படம் இதுவா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •