அண்ணாமலை பாத யாத்திரை ரத்து என்று பரவும் வதந்தியால் சர்ச்சை…

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

‘‘அண்ணாமலை பாத யாத்திரை ரத்து’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ தவிர்க்கமுடியாத காரணங்களால் பாஜக தலைவர் அண்ணாமலையின் பாத யாத்திரை ரத்து – தமிழக பாஜக’’, என்று எழுதப்பட்டுள்ளது. 

பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.  

Facebook Claim Link l Archived Link 

உண்மை அறிவோம்:

இவ்வாறு ஏதேனும் அறிவிப்பை பாஜக வெளியிட்டுள்ளதா என கண்டறியும் வகையில் அவர்களது தகவல் தொழில்நுட்ப பிரிவை தொடர்பு கொண்டு பேசினோம். ‘’இவ்வாறு எந்த அறிவிப்பையும் நாங்கள் வெளியிடவில்லை; வேண்டுமென்றே எங்களது யாத்திரைக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை இருட்டடிப்பு செய்யும் நோக்கில் எதிர்க்கட்சிகள் இவ்வாறு வதந்தி பரப்புகின்றன,’’ என்று பதில் கிடைத்தது. 

அடுத்தப்படியாக, நாம் அண்ணாமலையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் சென்று பார்வையிட்டோம். அதில், பாத யாத்திரை தொடர்பாக அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிடப்படுவதைக் கண்டோம். இன்றைய தேதியில் (ஆகஸ்ட் 12, 2023) கூட சில பதிவுகள் யாத்திரை தொடர்பாக இடம்பெற்றுள்ளதையும் கண்டோம். 

மேலும், பாத யாத்திரை ரத்து என்று நியூஸ் ஜே ஊடகம் செய்தி எதுவும் வெளியிடவில்லை. அவர்களது தரப்பிலும் நாம் இதுபற்றி பேசி உறுதிப்படுத்தியுள்ளோம். 

எனவே, பாத யாத்திரை நிறுத்தப்படவில்லை என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram 

Avatar

Title:அண்ணாமலை பாத யாத்திரை ரத்து என்று பரவும் வதந்தியால் சர்ச்சை…

Written By: Fact Crescendo Team 

Result: False