நாக்கால் நடனமாடும் திறமை படைத்தவர் சாவர்க்கர் என்று இந்து மக்கள் கட்சி கூறியதா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’நாக்கை மட்டும் தரையில் ஊன்றி 40 நிமிடங்கள் நடனமாடும் திறமை படைத்தவர் தேசத்தந்தை சாவர்க்கர்,’’ எனக் குறிப்பிட்டு, இந்து மக்கள் கட்சி ட்வீட் வெளியிட்டதாகப் பரவும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப்பில் அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், நாமும் தகவல் தேடியபோது, ஃபேஸ்புக்கில் சிலர் இதனை உண்மை என நம்பி பகிர்வதைக் கண்டோம்.

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
சமீப நாட்களாக, இந்து மக்கள் கட்சி மற்றும் அதன் தலைவர் அர்ஜூன் சம்பத்தை குறிவைத்து, ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றில் போலி ஐடி தொடங்கி, சிலர் வதந்தி பரப்புவதாக புகார் எழுந்துள்ளது. இந்த வரிசையில் பகிரப்படும் மற்றொரு வதந்திதான் மேற்கண்ட தகவல்.

இந்த ட்விட்டர் ஐடியின் (@Indumakalkatchi) முகப்பு பக்கத்தை பார்த்தாலே எளிதில் இது போலியான ஐடி என்பது விளங்கும்.

மார்ச் 24, 2022 மாலை 4.01 மணியளவில் இந்த ட்விட்டர் ஐடியில்தான் மேற்கண்ட பகடி ட்வீட் பகிரப்பட்டுள்ளது. அதன் லிங்க் கீழே இணைத்துள்ளோம்.

Parody Tweet Link

இந்து மக்கள் கட்சியின் (@Indumakalktchi) உண்மையான ட்விட்டர் ஐடி கீழே தரப்பட்டுள்ளது.

எனவே, இந்து மக்கள் கட்சி பெயரில் பகிரப்படும் போலியான ட்வீட்தான் மேலே நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:நாக்கால் நடனமாடும் திறமை படைத்தவர் சாவர்க்கர் என்று இந்து மக்கள் கட்சி கூறியதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False