முன்னாள் மிஸ் உக்ரைன் அனஸ்டாஷியா லென்னா ராணுவத்தில் சேர்ந்தாரா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

‘’முன்னாள் மிஸ் உக்ரைன் அனஸ்டாஷியா லென்னா ரஷ்யாவுக்கு எதிராகப் போரிடும் நோக்கில் தனது நாட்டு ராணுவத்தில் சேர்ந்தார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Fb Claim Link I Archived Link I Maalaimalar Website I Archived Link

இதே செய்தியை தமிழ் இந்து இணையதளமும் வெளியிட்டிருந்ததைக் கண்டோம்.

Tamil The Hindu FB Link I Archived Link I Website Link I Archived Link

உண்மை அறிவோம்:
ஊடகச் செய்திகளில் குறிப்பிடுவது போல, முதலில் போருக்குத் தயார் என்று குறிப்பிட்டு அனஸ்டாஷியா லென்னா பதிவு ஒன்றை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். ஆனால், பிறகு, அந்த புகைப்படங்கள் வைரலாகப் பரவியதால், தனது பதிவின் தலைப்பை எடிட் செய்து மாற்றி விட்டார்.

Anastasiia Lenna Instagram Link I The Tribune Link

இதுபற்றி விளக்கமும் அளித்துள்ள அவர், ‘’ராணுவத்தில் சேரும் எண்ணம் இல்லை. நான் கையில் வைத்திருப்பது ஏர்சாஃப்ட் கன் வகையைச் சேர்ந்ததாகும். உண்மையான துப்பாக்கி அல்ல. ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட உக்ரைன் மக்களை அழைக்கும் வகையில், இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளேன்,’’ என்று குறிப்பிட்டுள்ளார். இதனை பல்வேறு ஊடகச் செய்திகளிலும் அப்டேட் செய்துள்ளனர்.

Indian Express Link I Deccan Herald Link

மேலும், அவர் கையில் வைத்திருப்பது airsoft gun எனப்படும் விளையாட்டு துப்பாக்கியாகும். பார்ப்பதற்கு, அசல் துப்பாக்கிகளைப் போலவே, சந்தையில் புதுப்புது மாடல்களில் இந்த விளையாட்டு துப்பாக்கிகள் விற்கப்படுகின்றன. இவற்றில் ஒன்றையே கையில் வைத்தபடி, அனஸ்டாஷியா போஸ் கொடுத்துள்ளார். இந்தியாவில் கூட இத்தகைய விளையாட்டு துப்பாக்கிகள் ஆன்லைனில் விற்கப்படுகின்றன.

Airsoftgun India Link

இந்த அப்டேட் அனைத்தையும் குறிப்பிட்டு, தினத்தந்தி விளக்கமாகச் செய்தி வெளியிட்டிருக்கிறது. அதனையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம். 

Dailythanthi Link

ஆனால், இவற்றை குறிப்பிட்டு அப்டேட் செய்யாமல், மாலைமலர், தமிழ் இந்து போன்ற ஊடகங்கள் செய்தி வெளியிட்டு, வாசகர்களை குழப்பியுள்ளதாகச் சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:முன்னாள் மிஸ் உக்ரைன் அனஸ்டாஷியா லென்னா ராணுவத்தில் சேர்ந்தாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Partly False