‘பாஜகவுக்கு ஜெயக்குமார் பதிலடி’ என்று கூறி சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ பாஜகவுக்கு ஜெயக்குமார் பதில். அண்ணாமலை போன்றே பாஜக நிர்வாகிகளும் முட்டாள் தனமாக செயல்படுகின்றனர். அதிமுக இல்லை என்றால் பாஜக டெபாசிட் கூட வாங்காது. மதுரை மாவட்ட பாஜக தலைவர் சுசிந்திரனுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில்..’’, என்று எழுதப்பட்டுள்ளது.

பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

Facebook Claim Link l Archived Link

உண்மை அறிவோம்:

இவ்வாறு புதிய தலைமுறை ஏதேனும் செய்தி வெளியிட்டுள்ளதா என கண்டறியும் வகையில் அவர்களது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் சென்று பார்வையிட்டோம். இவ்வாறு எந்த செய்தியும் காணக் கிடைக்கவில்லை.

அடுத்தப்படியாக, நாம் புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். ‘’இதனை நாங்கள் வெளியிடவில்லை; இது எங்களது பெயரில் பரவும் வதந்தி,’’ என்று அவர்கள் தெரிவித்தனர்.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தி போலியானது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:பாஜகவுக்கு ஜெயக்குமார் பதிலடி என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

Written By: Fact Crescendo Team

Result: False