‘’அண்ணாமலைதான் அடுத்த தலைவர் என்று அதிமுக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டதால் அடிதடி,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Twitter Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
அதிமுக.,வின் புதிய தலைமை யார் என்பது தொடர்பாக, எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் மற்றும் சசிகலா ஆகியோரிடையே மோதல் வெடித்துள்ளது. இதையொட்டி நாள்தோறும் தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பு காட்சிகள் அரங்கேறி வரும் சூழலில், அதிமுக பொதுக்குழுவில், அண்ணாமலைதான் அடுத்த தலைவர் என்று அறிவிக்கப்பட்டதால் வன்முறை ஏற்பட்டதாக, மேற்கண்ட வகையில் சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர்.

உண்மையில், இப்படி எந்த செய்தியையும் கதிர் நியூஸ் வெளியிடவில்லை. இதுபற்றி அவர்களிடம் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம். மேலும், அதிமுக.,விலும் இப்படி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அதிமுக.,வில் நடைபெறும் பிரச்னைகளை கேலி செய்யும் வகையில் சிலர் வேண்டுமென்றே இப்படியான போலி நியூஸ் கார்டை கதிர் நியூஸ் பெயரில் தயாரித்து, ஷேர் செய்து வருவதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:அண்ணாமலைதான் அடுத்த தலைவர் என்று அதிமுக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டதா?

Fact Check By: Fact Crescendo Team

Result: False