‘’கொரோனா நோயாளிகளை கவச உடை அணிந்து முதலில் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

இதே போல, மேலும் பலர், மு.க.ஸ்டாலின்தான், கவச உடையணிந்து, இந்தியாவிலேயே கொரோனா நோயாளிகளை பார்வையிட்ட முதல் முதலமைச்சர் என்று கூறி தகவல் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
கோவையில் உள்ள ஈஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த மே 30, 2021 அன்று நேரில் சென்று பார்வையிட்டார். முறையான கவச உடையணிந்து, அவர் கொரோனா வார்டில் ஆய்வு செய்த புகைப்படம், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. ஊடகங்களிலும் இதுபற்றி செய்தி வெளியாகியுள்ளது.

TheNewsMinute Link I Vikatan News Link

அதேசமயம், நாட்டிலேயே இத்தகைய கவச உடை அணிந்து, கொரோனா நோயாளிகளை பார்வையிட்ட முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் என்று கூறி பலரும் தகவல் பகிர்ந்து வருகின்றனர். அது தவறான தகவல்.

ஆம். கடந்த 2020ம் ஆண்டே, கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் பரவ தொடங்கிய காலத்திலேயே, ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், இத்தகைய கவச உடைகளுடன் நேரில் சென்று, கொரோனா நோயாளிகளை சந்தித்திருக்கிறார்.

இது மட்டுமின்றி, அவர் அடிக்கடி இதுபோன்ற ஆய்வுப் பணிகளை கொரோனா சிகிச்சை அளிக்கப்படும் மையங்களில் நேரடியாகச் சென்று இன்றளவும் செய்து வருகிறார்.

இதேபோல, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், கடந்த மே மாதத்தில் அதாவது ஸ்டாலின் கோவை செல்வதற்கு சில நாட்கள் முன்பாக, கொரோனா நோயாளிகளை நேரில் சென்று சந்தித்திருக்கிறார். இதுதொடர்பான செய்திகள், மே 19, 2021 முதல் ஊடகங்களில் வெளியிடப்பட்டும் வந்திருக்கிறது.

RepublicWorld Link I TNIE Link

அடுத்தப்படியாக, சிக்கிம் முதலமைச்சர் பிரேம் சிங் தமாங், கடந்த மே 29, 2021 அன்று, அதாவது ஸ்டாலின் கோவை செல்வதற்கு ஒரு நாள் முன்பாக, கொரோனா நோயாளிகளை சந்தித்திருக்கிறார்.

NDTV Link

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், மே 30, 2021 அன்று மு.க.ஸ்டாலின் கோவையில் கொரோனா நோயாளிகளை சந்தித்தது பற்றி பகிரப்படும் ‘இந்தியாவிலேயே முதல் முதலமைச்சர்’ எனும் தகவல் தவறானது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:கொரோனா நோயாளிகளை நேரில் சந்தித்த முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?- முழு விவரம் இதோ!

Fact Check By: Pankaj Iyer

Result: False