
‘‘தமிழ்நாட்டுக்கு தனி ராணுவம் அமைக்கப்படும்,’’ என்று சீமான் அறிவித்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ நாதக 2026 தேர்தல் அறிக்கை வெளியீடு. 1. கச்சத்தீவை நெய்தல் படையை வைத்து மீட்டெடுப்போம். 2. தமிழ்நாடுக்கென தனி இராணுவம் அமைக்கப்படும். 3. படிக்காதவர்களுக்கும் அரசு வேலை வழங்கப்படும்.- நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
News Tamil 24X7 ஊடகத்தின் லோகோ உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட செய்தி உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது News Tamil 24X7 பெயரில் பகிரப்படும் போலியான நியூஸ் கார்டு என்று, தெரியவந்தது.

உண்மையான நியூஸ் கார்டில், ‘’ நாதக 2026 தேர்தல் அறிக்கை வெளியீடு. 1. திருச்சி, கோவை, சென்னை, குமரி, மதுரை ஆகிய 5 தலைநகரங்கள், 2. 3 சட்டமன்ற தொகுதிக்கு 1 நாடாளுமன்ற தொகுதி, 3. மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வரியில் 75 சதவீதம் கிடைக்க போராட்டம், 4. சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க ஏற்பாடு செய்யப்படும், 5. பெண்களுக்கு தனித்தொகுதி- நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
News Tamil 24X7 Link 1 l Link 2 l Link 3
கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…
அடுத்தப்படியாக, நாதக., ஐடி பிரிவு மற்றும் News Tamil 24X7 ஆசிரியர் குழு ஆகியவற்றில் பேசி, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு போலியான ஒன்று, என்பதை உறுதி செய்துள்ளோம்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு, போலியானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram


