FactCheck: அர்ச்சகர் பயிற்சி மையத்தின் அவலநிலை?- பழைய புகைப்படத்தால் சர்ச்சை…

அரசியல் சமூகம் தமிழ்நாடு

‘’திமுக ஆட்சியில் அர்க்கர் பயிற்சி நிலையத்தின் அவல நிலை ,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்: 

இதனை வாசகர் ஒருவர் +91 9049044263 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார்.

இதன்படி, பாஜக.,வைச் சேர்ந்த கல்யாணராமன் என்பவர், ட்விட்டரில், தமிழக அரசின் லெவலே தனிதான் போங்க, என்று குறிப்பிட்டு, மதுரையில் உள்ள அர்ச்சகர் பயிற்சி நிலையம் ஒன்றின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவை பாஜக.,வைச் சேர்ந்த காயத்ரி ரகுராம் ரீட்விட் செய்துள்ளார். அதனை பலரும் ஸ்கிரின்ஷாட் எடுத்து பகிர்ந்து வருகின்றனர்.

காயத்ரி ரகுராம் வெளியிட்ட ட்வீட் லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Gayathri Raguramm tweet link I Archived Link

உண்மை அறிவோம்:
திமுக தலைமையில் 2021ல் பதவியேற்றுள்ள புதிய அரசு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை நீண்ட போராட்டத்திற்கு பின், தற்போது நிறைவேற்றியுள்ளது. இதன்படி, பணி நியமன ஆணைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

Puthiyathalaimurai Link

இந்த சூழலில், திமுக அரசின் இத்தகைய நடவடிக்கை ஏற்புடையதல்ல, அனைவரும் அர்ச்சகர் ஆனால் இறைவன் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்றெல்லாம் கூறி, சில குறிப்பிட்ட சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கேற்ப, பாஜக., நிர்வாகிகள் மட்டுமின்றி, ஆதரவாளர்கள் அனைவருமே இந்த விசயத்தில் திமுக அரசை கண்டித்தும், கேலி செய்தும் பலவிதமான தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அப்படி பகிரப்பட்ட தகவல்களில் ஒன்றுதான், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் பற்றிய தகவலும்.

உண்மையில், குறிப்பிட்ட புகைப்படத்திலேயே இது எப்போது எடுக்கப்பட்டது, என்பதற்கான தகவலும் அடங்கியுள்ளது. ஆம், அதில் அர்ச்சகர் பயிற்சி மைய கட்டிடத்தின் மேலே, சென்னையில் ஒரு நாள் என்ற படத்தின் போஸ்டரும், இடது புறம் விஸ்வரூபம் படத்தின் போஸ்டரும் ஒட்டப்பட்டுள்ளன.

இவ்விரு திரைப்படங்களுமே 2013ம் ஆண்டில் வெளிவந்தவை. எனவே, 2013ல் அதுவும் அதிமுக ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை, தற்போதைய அரசியல் சூழலுடன் தொடர்புபடுத்தி திமுக அரசை விமர்சிக்கும் வகையில் இவர்கள் பகிர்ந்துள்ளதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

The Hindu Link I Archived Link

பழைய புகைப்படம் என்று கூட தெரியாமல், பாஜக ஆதரவாளர்கள் இப்படி வதந்தி பகிர்வதை பலரும் கேலி செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அதில் ஒரு கிண்டல் பதிவை கீழே இணைத்துள்ளோம்.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:திமுக ஆட்சியில் அர்ச்சகர் பயிற்சி மையத்தின் அவலநிலை?- பழைய புகைப்படத்தால் சர்ச்சை…

Fact Check By: Pankaj Iyer 

Result: False