சினிமா பாட்டிற்கு நடனமாடும் கிறிஸ்தவ பள்ளி ஆசிரியர்கள்- இந்த வீடியோ திமுக ஆட்சியில் எடுக்கப்பட்டதா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’திமுக ஆட்சியில் பள்ளி குழந்தைகள் முன்பாக, சினிமா பாட்டிற்கு நடனமாடும் கிறிஸ்தவ பள்ளி ஆசிரியர்கள், இதுவே திராவிட மாடல்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

Facebook Claim Link l Archived Link 

30/12/2022 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’பள்ளிக்குழந்தைகளை இப்படித்தான் வளர்க்கணும் , இதுவே திராவிட மாடல் , உதயநிதி ரசிகர் மன்ற தலைவரை கல்வி அமைச்சரா டங்கா மாரி தான்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

உண்மை அறிவோம்:

குறிப்பிட்ட வீடியோவில் ‘’டங்கா மாரி ஊதாரி ,’’ என்ற பாடல் பின்னணியில் ஒலிக்க, அதற்கேற்ப கன்னியாஸ்திரி மற்றும் பாதிரியார் இருவரும் சேர்ந்து நடனமாட, பள்ளி மாணவர்கள் கைதட்டி ரசிப்பதைக் காண முடிகிறது. வீடியோவின் ஒரு ஃபிரேமை பிரித்தெடுத்து, ரிவர்ஸ் இமேஜ் முறையில் தகவல் தேடியபோது, இந்த வீடியோ 2019ம் ஆண்டில் யூடியுப்பில் பதிவேற்றப்பட்டதைக் கண்டோம். 

தொடர்ந்து தகவல் தேடியபோது, இதுபற்றி 2017ம் ஆண்டிலேயே ஒருவர் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருப்பதைக் கண்டோம். அந்த பதிவு கீழே இணைக்கப்பட்டுளளது.  

Tweet Link 


எனவே, மேற்கண்ட வீடியோ தொடர்பான பதிவுகள், 2017 முதலே யூடியுப், ட்விட்டர் போன்றவற்றில் காண முடிகிறது. அப்போது, திமுக ஆட்சியில் இல்லை. 2011 முதல் 2022 வரை அதிமுக ஆட்சியே தமிழ்நாட்டில் நடைபெற்றது. திமுக ஆட்சிக்கு வந்ததே 2022ம் ஆண்டுதான். அதன் பிறகே, பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நண்பர் அன்பில் மகேஷ் நியமிக்கப்பட்டார். எனவே, பழைய வீடியோவை புதியதுபோல தற்போது பகிர்ந்து, திமுக ஆட்சி பற்றி வதந்தி பரப்பியுள்ளனர் என்று தெளிவாகிறது.  
முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram 

Avatar

Title:சினிமா பாட்டிற்கு நடனமாடும் கிறிஸ்தவ பள்ளி ஆசிரியர்கள்- இந்த வீடியோ திமுக ஆட்சியில் எடுக்கப்பட்டதா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: PARTLY FALSE