உலகின் நம்பகத்தகுந்த அரசியல் தலைவர்கள் பட்டியலில் ராகுல் காந்திக்கு 3வது இடமா?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

‘’உலகின் நம்பகத்தகுந்த அரசியல் தலைவர்கள் பட்டியலில் ராகுல் காந்திக்கு 3வது இடம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களல் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதில், ‘’உலகின் நம்பகத்தகுந்த அரசியல் தலைவர்கள் பட்டியலில் ராகுல் காந்திக்கு 3வது இடம், மோடிக்கு 62வது இடம்,’’ என்றும் எழுதப்பட்டுள்ளது. 

இந்த தகவலை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், நாம் ஆய்வு மேற்கொண்டோம். 

உண்மை அறிவோம்:

இந்த செய்தி ஏற்கனவே 2016ம் ஆண்டில் இருந்தே பகிரப்பட்டு வருகிறது. அதனை கீழே இணைத்துள்ளோம். 

அதே ஸ்கிரின்ஷாட்டை மீண்டும் ஒருமுறை கீழே இணைத்துள்ளோம். இது பார்க்க, 2016ம் ஆண்டு BBC ஊடகம் இந்த செய்தியை வெளியிட்டதைப் போல தெரிகிறது. ஆனால், இதில் உள்ள எழுத்துகள் அனைத்தும் Fabricate செய்ததைப் போன்றுள்ளது. 

இதில், குறிப்பிட்டுள்ள 11, Jan 2016 தேதியன்று BBC ஊடகம் வெளியிட்ட செய்தி விவரத்தை தேடினோம். ஆனால், அதில் எங்கேயும் ராகுல் காந்தி பற்றி எந்த செய்தியும் இல்லை. 

BBC Article Link 

நீண்ட நேரம் தேடியும், மேற்கண்ட வகையில் கூகுள் மற்றும் பிபிசி இணையதளத்தில் ராகுல் காந்தி தொடர்பான கருத்துக் கணிப்பு எதுவும் கிடைக்கவில்லை. இறுதியாக, நாம் BBC India பிரிவு ஆசிரியர் குழுவை தொடர்புகொண்டு விளக்கம் கேட்டோம். ‘’இதுபோன்ற கருத்துக் கணிப்பு எதுவும் நாங்கள் நடத்தவில்லை. 2016ம் ஆண்டில் இருந்தே எங்களது பெயரை பயன்படுத்தி சிலர் இத்தகைய வதந்தி பரப்பி வருகிறார்கள்,’’ என்றனர். 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தி தவறான ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.  
முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:உலகின் நம்பகத்தகுந்த அரசியல் தலைவர்கள் பட்டியலில் ராகுல் காந்திக்கு 3வது இடமா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: False

Leave a Reply