‘‘ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் மரணம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Tweet Link l Archived Link

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் மரணம்’’, என்று எழுதப்பட்டுள்ளது.

பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தினகரன் மட்டுமின்றி பல்வேறு ஊடகங்களும் இந்த செய்தியை பரபரப்பாக வெளியிட்டுள்ளன.

இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்யும் சூழலில், இந்த தகவல் பற்றி ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் மற்றொரு முன்னாள் வீரர் ஹென்றி ஓலங்கா விளக்கம் அளித்துள்ளார். அவர் நேரடியாகவே, ஹீத் ஸ்ட்ரீக்கை தொடர்பு கொண்டு பேசி, உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஓலங்காதான் முதலில் இந்த தகவலை பகிர்ந்தார். எனவே, ஓலங்கா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஸ்ட்ரீக் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

sports.ndtv link

இதனைத் தொடர்ந்து, ஹென்றி ஓலங்கா மறுப்பு கூறி மற்றொரு ட்வீட் வெளியிட்டுள்ளார். அதனையும் கீழே இணைத்துள்ளோம்.

Henryolonga tweet link

இதுதொடர்பாக இதர ஊடகங்களில் வெளியான செய்தியையும் இங்கே இணைத்துள்ளோம்.

Economictimes link l cnbctv18 link

மேலும், ஜிம்பாப்வே நாட்டின் SPORTS AND RECREATION COMMISSION சார்பாக அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

Gambakwe link

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தி தவறானது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் மரணம் என்று பரவும் வதந்தியால் சர்ச்சை…

Written By: Fact Crescendo Team

Result: False