FactCheck: எஸ்.வி.சேகர் திமுக.,வில் இணைந்ததாகப் பகிரப்படும் வதந்தி

சமூக ஊடகம் தமிழ்நாடு

‘’நடிகர் எஸ்.வி.சேகர் திமுகவில் இணைந்தார்,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim Link 1Archived Link 1
Facebook Claim Link 2Archived Link 2

இந்த செய்தியை நமக்கு வாட்ஸ்ஆப் மூலமாக, வாசகர்கள் பலரும் சந்தேகம் கேட்கவே, நாமும் ஃபேஸ்புக்கில் யாரும் பகிர்ந்துள்ளனரா என்று விவரம் தேடினோம். அப்போது, பலரும் இதனை ஷேர் செய்வதை கண்டதன் பேரில், ஆய்வு செய்ய தொடங்கினோம்.

உண்மை அறிவோம்:
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நவம்பர் 27, 2020 அன்று பிறந்த நாள் கொண்டாடினார். இதையொட்டி, அவருக்கு அரசியல் கட்சிப் பிரமுகர்களும், தொழிலதிபர்களும் வாழ்த்து தெரிவித்தனர். அதன் ஒருபகுதியாக, சக சினிமா நடிகரும், அரசியலில் ஈடுபட்டு வருபவருமான எஸ்.வி.சேகர், உதயநிதியை நேரில் சென்று சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து கூறினார். 

Vikatan News LinkOneIndia Tamil Link

இதனைச் சரியாக ஆய்வு செய்யாமல், குமுதம் ஊடகம், எஸ்வி சேகர் திமுகவில் சேர்ந்துவிட்டதாக, செய்தி வெளியிட்டது. இதற்கு உடனடியாக, எஸ்வி சேகர் கண்டனம் தெரிவித்து, ட்விட்டரில் கருத்து பகிர்ந்திருந்தார். இதனை பார்த்ததும் உடனடியாக, குமுதம் ஊடகம் அந்த செய்தியை நீக்கிவிட்டது.

Archived Link

உண்மையில் நடந்தது என்னவென்றால், தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது அவர்களுடன் சென்றிருந்த எஸ்.வி.சேகர், உதயநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதனை தவறாகப் புரிந்துகொண்டு, குமுதம் ஊடகம் செய்தி வெளியிட்டுவிட்டது.

இந்த தவறை அவர் சுட்டிக்காட்டவே, உடனடியாக, ஊடகங்கள் பலவும் செய்தியை அகற்றிவிட்டன. ஆனால், இந்த உண்மை தெரியாமல் இன்னமும் பலர் ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் குறிப்பிட்ட செய்தியை பகிர்ந்து வருகின்றனர்.

முடிவு:

தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:எஸ்.வி.சேகர் திமுக.,வில் இணைந்ததாகப் பகிரப்படும் வதந்தி

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •