ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் 41.55 ரூபாய் வரியை தமிழ்நாடு அரசு வசூலிக்கிறதா?

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.41.55ஐ தமிழ்நாடு அரசு வரியாக வசூலிக்கிறது என்பது போன்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெட்ரோல் நிலையத்தில் அறிவிப்புப் பலகை வைத்திருப்பது போன்று எடிட் செய்யப்பட்ட புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “ அடிப்படை விலை 35.50 மத்திய அரசு வரி 19.50 மாநில அரசு வரி 41.55 விநியோகஸ்தர் 6.50 மொத்தம் 103.05.  […]

Continue Reading

பா.ஜ.க மாநிலங்களில் பெட்ரோல் விலை குறைவு… எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் அதிகமா?

பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் எல்லாம் பெட்ரோல் விலை மிகக் குறைவாக இருப்பது போலவும், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.மு.க போன்ற எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் மட்டும் பெட்ரோல் விலை அதிகமாக இருப்பது போலவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மாநிலங்கள் அளவில் பெட்ரோல் விலை நிலவரம் எப்படி உள்ளது என்று ஆங்கிலத்தில் புகைப்பட […]

Continue Reading

ஸ்கூட்டர் ஓட்டி பழகிய மம்தா பானர்ஜி என்று பகிரப்படும் வீடியோ உண்மையா?

மேற்கு வங்க முதல்வர் இருசக்கர வாகனம் ஓட்ட மேற்கொண்ட பயிற்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாலையில் தொண்டர்கள் மற்றும் போலீசார் சூழ மம்தா பானர்ஜி இருசக்கர வாகனம் ஓட்டி வரும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தமிழ்நாட்டில் ஸ்டாலின் சைக்கிள்களில்… அங்க மம்தா மூதேவி ஸ்கூட்டர் பழகுறாளாம். அதுவும் ரோட்டில் இவ்வளவு அடியாட்கள் […]

Continue Reading

பெட்ரோல் மீதான மத்திய அரசின் வரி ரூ.22.54 என நாணயம் விகடன் வெளியிட்ட தகவல் உண்மையா?

பெட்ரோல் மீது மத்திய அரசு ரூ.22.54 வரி விதிப்பதாக நாணயம் விகடன் நியூஸ் கார்டு வெளியிட்டிருந்தது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெட்ரோல், டீசல் – மத்திய மாநில அரசின் வரி மற்றும் பங்கீடு என்று நாணயம் விகடன் வெளியிட்டதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. பெட்ரோல் மீதான வரிகள் தொடர்பான பகுதியில் மத்திய அரசின் வரி 22.54 […]

Continue Reading

வெயில் காரணமாக பெட்ரோல் டேங்க் முழுவதும் நிரப்ப வேண்டாம் என்று இந்தியன் ஆயில் எச்சரித்ததா?

வாகனங்களில் பெட்ரோல் டேங்கை நிரப்ப வேண்டாம். இப்படி செய்வதால் பெட்ரோல் டேங்க் வெடிக்க வாய்ப்பு உள்ளது என்று இந்தியன் ஆயில் எச்சரிக்கை வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டது போன்று எச்சரிக்கை ஒன்று ஆங்கிலத்திலிருந்தது. அதில், “வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என்பதால் வாகன ஓட்டிகள், தங்கள் வாகனங்களின் டேங்கை […]

Continue Reading

பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் விலை குறைவா?- உண்மை அறிவோம்!

பாஜக ஆளும் மாநிலங்களில் எல்லாம் பெட்ரோல், டீசல் விலை ரூ.100க்கு கீழ் உள்ளது என்றும், தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயைக் கடந்து விற்பனையாகிறது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்ட செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்துப் பகிர்ந்துள்ளனர். அதில், பாஜக ஆளும் மாநிலங்கள் […]

Continue Reading

பெட்ரோல் விலை உயராது என்று அண்ணாமலை கூறினாரா?

உத்தரப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தால் பெட்ரோல் விலை உயராது என்று தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை புகைப்படத்துடன் கூடிய நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பெட்ரோல் விலை உயராது. தேர்தல் முடிந்தால் பெட்ரோல் விலை […]

Continue Reading

FACT CHECK: தமிழகத்தை விட கர்நாடகாவில் பெட்ரோல் 8 ரூபாய் விலை குறைவா?

தமிழகத்தை விட கர்நாடகத்தில் பெட்ரோல் ரூ.8.24ம், டீசல் 9.58ம் குறைவாக விற்பனை செய்யப்படுகிறது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு விலையை விட இங்கு பெட்ரோல், டீசல் விலை குறைவு என்று அறிவிப்பு பலகை ஒன்று பெட்ரோல் பங்கில் தொங்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், கர்நாடக மாநிலத்தில் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை போங்கடா […]

Continue Reading

FACT CHECK: பெட்ரோல் – டீசல் மீதான வரியை குறைத்ததா கேரள அரசு?

கேரளா மற்றும் புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை மாநில அரசு குறைத்துள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்த் திரைப்பட காட்சி ஒன்றுடன் கூடிய புகைப்பட பதிவு பகிரப்பட்டுள்ளது. அதில், “கேரளாவில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி குறைப்பு. பெட்ரோல் விலை ரூ.6.67, டீசல் விலை ரூ.12.33 குறைத்து மாநில […]

Continue Reading

FACT CHECK: பெட்ரோல் விலை உயர்வுக்கு மட்டும் போராடுவது ஏன் என்று அண்ணாமலை கேட்டாரா?

அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வுக்கு போராடாதவர்கள், ஆடம்பர பொருளான பெட்ரோல் விலை உயர்வுக்கு மட்டும் போராடுவது ஏன் என்று தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கேட்டதாக பரவும் வதந்தி. தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பா.ஜ.க வெளியிட்டது போன்ற போட்டோ கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அரிசி பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் விலையேறிய போது போராடாதவர்கள் ஆடம்பர பொருளான பெட்ரோல் விலையேறினால் மட்டும் போராட வருவது […]

Continue Reading

FACT CHECK: தமிழ்நாட்டில் இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் ரூ.65க்கு விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதாக வதந்தி!

தமிழ்நாட்டில் இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் ரூ.65க்கு விற்பனை செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்ததாக ஒரு வதந்தி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “பெட்ரோல் விலை அதிரடி குறைப்பு! தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை 65 மட்டுமே. தமிழக அரசின் வரி 35 ஐ குறைத்து […]

Continue Reading

பெட்ரோல் விலை உயர்வை கைதட்டி வரவேற்ற மோடி?- எடிட் செய்யப்பட்ட வீடியோவால் குழப்பம்!

டோக்கிய ஒலிம்பிக் தொடக்க விழாவில் இந்திய தேசியக் கொடி ஏந்தி வந்த நமது வீரர்களை பிரதமர் மோடி எழுந்து நின்று கைத்தட்டி உற்சாகப்படுத்திய வீடியோவை எடிட் செய்து சமூக ஊடகங்களில் சிலர் பகிர்ந்து வருகின்றனர். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 இந்தியாவில் பெட்ரோல் விலை தொடர்பாக சன் நியூஸ் தொலைக்காட்சியின் செய்தியை பிரதமர் மோடி பார்ப்பது போலவும், பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டியது என்ற போது […]

Continue Reading

FactCheck: வானதி சீனிவாசன் பற்றி பகிரப்படும் பலவிதமான வதந்திகள்

‘’வானதி சீனிவாசன் மத்திய அரசுக்கு எதிராகப் போராடினார்,’’ என்று கூறி பகிரப்படும் ஃபேஸ்புக் புகைப்படங்கள் பலவற்றை காண நேரிட்டது. அவற்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link ஜூன் 13, 2021 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவை, திராவிடத் தமிழன் என்ற ஐடி வெளியிட்டுள்ளது. இதில் வானதி சீனிவாசன் கையில் பதாகை ஒன்றை ஏந்தியுள்ளார். அந்த பதாகையில், ‘’மானங்கெட்ட ஒன்றிய அரசே போடுறன்னு சொன்ன 15 லட்சத்தை அக்கௌண்டில் […]

Continue Reading

FACT CHECK: மத்திய அரசிடமிருந்து ரூ.52க்கு பெட்ரோல் வாங்கி அதிக விலைக்கு தமிழ்நாடு அரசு விற்பனை செய்கிறதா?

மத்திய அரசிடமிருந்து தமிழக அரசு ரூ.52க்கு பெட்ரோலை வாங்கி 100 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது என்று சில பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் படத்துடன் புகைப்பட பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், பெட்ரோல் விலை: மத்திய அரசின் விலை ரூ.52.75, தமிழக அரசின் விலை ரூ.99.82. கொள்ளை லாபம் […]

Continue Reading

FactCheck: மைல்கற்களை அருகருகே நட்டு வைத்தாரா மோடி?- பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஒட்டி பரவும் வதந்தி

‘’எரிபொருள் விலை உயர்வால் அதிக மைலேஜ் கிடைக்கும் வகையில், மைல்கற்களை அருகருகே நட்டு வைத்த மோடி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இந்த புகைப்படத்தில், மோடி மைல்கற்களை அருகருகே நட்டு வைப்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. அதன் மேலே, ‘’பெட்ரோல் டீசல் விலையை குறைக்க முடியாது. வேனும்னா அதிக மைலேஜ் வர மாதிரி கிலோமீட்டர் கல்லை பக்கம் பக்கமா நட்டு தரோம்,’’ என்று […]

Continue Reading

FACT CHECK: நாகாலாந்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.16-க்கு விற்பனையா?- தினகரன் செய்தியால் குழப்பம்

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.16.04 என்று தினகரன் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தது. பலரும் இதை ஷேர் செய்யவே இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I dinakaran.com I Archive 2 “நாகலாந்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி குறைப்பு: ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.16.04” என்று தலைப்பிடப்பட்ட செய்தியின் இணைப்பு ஃபேஸ்புக்கில் ஷேர் செய்யப்பட்டுள்ளது. dinakaran daily newspaper என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் […]

Continue Reading

FACT CHECK: பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து ஜெர்மனியில் நடந்த போராட்டத்தின் படங்களா இவை?

ஜெர்மனியில் பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து மக்கள் சாலை, மால், அலுவலகங்களில் நிறுத்திச் சென்றார்கள் என்று சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook 1 I Archive 1 I Facebook 2 I Archive 2  சாலை முழுக்க வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களை வைத்து இரண்டு பதிவு உருவாக்கப்பட்டிலும். இரண்டிலும், “ஜெர்மனி நாட்டு அரசு தங்கள் நாட்டில் […]

Continue Reading

இந்தியாவை விட இலங்கையில் பெட்ரோல் விலை குறைவாக விற்க காரணம் என்ன?

‘’இந்தியாவை விட இலங்கையில் பெட்ரோல் விலை குறைவு,’’ என்று கூறி பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த பதிவில், இந்தியாவை விட இலங்கையில் பெட்ரோல் விலை குறைவு என்றும், இந்தியாவில் இருந்துதான் இலங்கை பெட்ரோல் இறக்குமதி செய்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்கின்றனர். உண்மை அறிவோம்:முதலில் ஒரு விசயம், வெளிநாட்டில் விற்பனை செய்யப்படும் பொருளை […]

Continue Reading

பெட்ரோல், டீசல் விலை; பத்திரிகையாளர் சந்திப்பை நிறுத்திய பாஜக தலைவர்கள்? உண்மை இதோ!

பெட்ரோல், டீசல் விலை குறித்து கேள்வி கேட்டதால் பத்திரிகையாளர் சந்திப்பை நிறுத்திவிட்டு பா.ஜ.க தலைவர்கள் வெளியேறியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்து வெளியேறுவது போல உள்ள வீடியோவை பகிர்ந்துள்ளனர். நாற்காலியை விட்டு எழுந்து செல்லும்போது சிலர் பெட்ரோல் விலை தொடர்பாக கேள்வி எழுப்புகின்றனர்.  நிலைத் தகவலில், “நேற்று மகராஷ்டிரா […]

Continue Reading

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மாநில அரசுகள் வசூலிக்கும் VAT எவ்வளவு?

‘’ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மாநில அரசுகள் வசூலிக்கும் VAT எவ்வளவு தெரியுமா,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றைக் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  இந்த தகவலை வாசகர் ஒருவர், நமக்கு வாட்ஸ்ஆப் மூலமாக அனுப்பி வைத்து, இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டார். இது கடந்த சில ஆண்டுகளாகவே, ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வரும் தகவலாகும்.  Facebook Claim […]

Continue Reading

ஹெல்மெட் போடாத இருசக்கர வாகன ஓட்டிகள், பெட்ரோல் பங்கில் நுழைய தடை! – ஃபேஸ்புக் பதிவு உண்மை என்ன?

வருகிற 1ம் தேதி முதல், ஹெல்மெட் போடாத இருசக்கர வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்கில் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link “இனி ஹெல்மெட் போடாவிட்டால் பெட்ரோல் பங்க்கிற்குள் நுழையவே முடியாது… வரும் 1ம் தேதி முதல் புதிய அதிரடி… குழந்தைகளை கற்பழக்கிறவனை எல்லாம் ஜாமீனில் விட்டுடுங்க ஹெல்மெட் போடாதவனை கரெக்டா பிடிங்க. இந்த ஹெல்மெட் சட்டம் வந்த பிறகுதான் […]

Continue Reading