தமிழக அரசின் கடனை ஏற்றுக் கொள்வதாக கனடா பிரதமர் வாக்குறுதி அளித்தாரா?

சமூக ஊடகம் | Social தமிழகம்

‘’தமிழக அரசின் கடனை ஏற்றுக் கொள்வதாக கனடா பிரதமர் வாக்குறுதி அளித்தார்,’’ என்று கூறி பகிரப்பட் டுவரும் ஒரு வைரல் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

இதில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் புகைப்படத்தை இணைத்து ஒரு நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’தமிழகத்தின் கடன் 3.59 லட்சம் கோடியை தானே அடைத்து விடுவதாக கனடா பிரதமர் சொல்லி விட்டார்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதன் மேலே, ‘’ எடப்பாடியாரே தூக்குல தொங்கிருங்க ..பார்த்தீர்களா எம் தமிழ் தலைவனை .. தமிழனா இருந்து ஷேர் பண்ணுடா,’’ என்றும் எழுதியுள்ளனர். 

உண்மை அறிவோம்:
இது பார்ப்பதற்கு சற்று வேடிக்கையாக இருந்தாலும் 1,68,000 பேர் இதனை யோசனையின்றி ஷேர் செய்துள்ளனர். அத்துடன், இதில் எடப்பாடியாரே தூக்குல தொங்கிருங்க என்று விஷமத்தனமாக எழுதியுள்ளனர்.

சமூக ஊடகங்களுக்கு உள்ள செல்வாக்கால், இதுபோன்ற விஷமத்தனமான வதந்திகளைக் கூட பலர் உண்மை என நம்பி ஏமாற நேரிடுகிறது. இதனை பகிர்ந்தவர்களுக்கு இது விளையாட்டுத்தனமாகவோ அல்லது அரசியல் உள்நோக்கமாகவோ இருக்கலாம். ஆனால், சமூக ஊடகங்களை பயன்படுத்தும் சாமானிய மக்களை இது தவறாக வழிநடத்தக்கூடிய விசயமாகும். 

தவிர இதனை ஒன்றரை லட்சத்திற்கும் மேலானோர் ஷேர் செய்துள்ளதால், இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி நமது வாசகர் ஒருவர் கேட்டுக் கொண்டார். அதன்பேரிலேயே இவ்வாறு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேசினாரா அல்லது வாக்குறுதி அளித்தாரா என்று விவரம் தேடினோம். 

தற்சமயம், உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பாதிப்பு நிலவுகிறது. இதனால், உலக நாடுகள் தங்களது அன்றாட வர்த்தகப் பணிகளை நிறுத்திவிட்டு, மக்களின் உயிரை காப்பாற்றுவதில் முழு மூச்சுடன் செயல்படுகின்றன. 

இத்தகைய சூழலில், கனடா பிரதமர் இவ்வாறு அறிவித்தாரா என்பது சந்தேகமான விசயமாக உள்ளது. மேலும், இந்த பதிவு கடந்த 2018ம் ஆண்டில்தான் முதலில் பகிரப்பட்டிருக்கிறது. ஆனால், இன்று வரை ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடாவில் வசிக்கும் தமிழர்களுக்காகச் சில சலுகைகளை அறிவித்திருக்கிறார். இதையடுத்து பலரும் அவரை தமிழர்களுடன் தொடர்புபடுத்தி விதவிதமான வதந்திகளை பரப்புவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். 

இப்படி ஏற்கனவே கனடா பிரதமர் ஜஸ்டின் பற்றி பரவிய வதந்திகளில் சிலவற்றை நாம் ஏற்கனவே உண்மை கண்டறியும் ஆய்வு செய்து சமர்ப்பித்துள்ளோம். இதுபற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும். 

இந்திய பிரதமர் இப்படி அறிவித்தாலும் கூட ஒரு லாஜிக் உள்ளது. ஆனால், கனடாவின் பிரதமர் எப்படி தமிழகத்தின் கடன் சுமையை ஏற்றுக்கொள்வதாக அறிவிப்பார்? லாஜிக் இல்லாமல் வேண்டுமென்றே தமிழ் மக்களை குழப்பும் வகையில் பகிரப்பட்ட இந்த வதந்தியை யாரும் உண்மை என நம்ப வேண்டாம். இதுபற்றி சந்தேகம் இருப்பின் இங்கே செய்யவும். 

தமிழகத்தின் கடன் சுமை பற்றிய உதாரணத்திற்கு ஒரு செய்தி லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

எனவே, உண்மை போலவே பகிரப்படும் இத்தகைய விஷமத்தனமான வதந்திகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை யாரும் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:தமிழக அரசின் கடனை ஏற்றுக் கொள்வதாக கனடா பிரதமர் வாக்குறுதி அளித்தாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False