FactCheck: நாரப்பா படத்தை ‘நான்தாண்டா அரக்கன்; என் பையன் ஒரு கிறுக்கன்’ எனும் பெயரில் தமிழில் டப் செய்தனரா?

சமூகம் தமிழ்நாடு

‘’நாரப்பா படத்தின் தமிழ் டப்பிங் தலைப்பு, நான்தாண்டா அரக்கன், என் பையன் ஒரு கிறுக்கன் என்று உள்ளது,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

இந்த தகவலை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தார். குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவின் கமெண்ட்டில் கூட பலரும் இது போலி என்று குறிப்பிட்டிருந்ததைக் கண்டோம்.

உண்மை அறிவோம்:
சமீபத்தில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான வக்கீல் சாப் என்ற தெலுங்கு படத்தை, தமிழில் வக்கீல் அய்யா என்று டப்பிங் செய்து, ஹாட்ஸ்டாரில் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். 

Vakeel Saab Link

இதற்குப் பலரும் கேலி, கிண்டல் செய்து விமர்சித்து வந்த நிலையில், தற்போது நாரப்பா படத்தையும் இதேபோல டப் செய்துள்ளதாக, மேற்கண்ட வகையில் தகவல் பகிர தொடங்கியுள்ளனர்.

தமிழில் வெளியான அசுரன் படம், தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. வெங்கடேஷ் டக்குபதி நடித்துள்ள இந்த படம், ஜூலை 20 அன்று அமேசான் பிரைமில் வெளியாகிறது.

TheNewsMinute Link

இதேபோல, படத்தின் தயாரிப்பு நிறுவனமும், அமேசானில்தான் தங்களது திரைப்படம் வெளியாகிறது எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதேபோல, Hotstar இணையதளம் மற்றும் விஜய் டிவியின் ட்விட்டர் பக்கம் உள்ளிட்டவற்றிலும் தகவல் தேடிப் பார்த்தோம். இப்படி எந்த தகவலும் காணக் கிடைக்கவில்லை.

எனவே, இன்னமும் தெலுங்கில் எடுக்கப்பட்ட ஒரிஜினல் வெர்ஷனே ரிலீஸ் ஆகாத சூழலில், அதற்குள்ளாக தமிழில், ‘’நான்தாண்டா அரக்கன், என் பையன் ஒரு கிறுக்கன்,’’ என்று வெளியாகியுள்ளதாகக் கூறி யாரோ நகைச்சுவையாக இந்த தகவலை தயாரித்து பகிர்ந்துள்ளனர். அதனை மற்றவர்கள் உண்மை என நம்பி ஷேர் செய்கிறார்கள் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.  

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:நாரப்பா படத்தை ‘நான்தாண்டா அரக்கன்; என் பையன் ஒரு கிறுக்கன்’ எனும் பெயரில் தமிழில் டப் செய்தனரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •