FactCheck: அமெரிக்காவில் எடுக்கப்பட்ட லுங்கி விளம்பரம்?- வைரல் வீடியோவின் முழு விவரம்!

அரசியல் சமூகம் தமிழ்நாடு

‘’அமெரிக்காவில் எடுக்கப்பட்ட லுங்கி விளம்பரம்,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link

இந்த வீடியோ, அமெரிக்காவில் எடுக்கப்பட்டது என்று கூறி பலரும் கடந்த 2018 முதலே ஷேர் செய்து வருகின்றனர்.

Screenshot: FB posts with similar caption

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட வீடியோவில் இடம்பெறும் நடிகர்களை பார்த்தால், ஆசிய நாட்டவர் போல முகச்சாயல் உள்ளது. ஆனால், அவர்களை அமெரிக்கர்கள் என்று கூறுவது நமக்குச் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

எனவே, இந்த வீடியோ, எங்கே, யாரால் எடுக்கப்பட்டது என விவரம் தேடினோம். இதன்படி, வெவ்வேறு கீவேர்ட் பயன்படுத்தி கூகுளில் தகவல் தேடினோம்.

அப்போது, Longyi Brothers என்ற பெயரில் செயல்படும் ஒரு யூடியுப் சேனல் பற்றி விவரம் கிடைத்தது. அந்த சேனலில், 2018ம் ஆண்டு மார்ச் 7 அன்று இந்த வீடியோ பதிவேற்றியிருந்ததையும் கண்டோம்.

முழு வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை பதிவேற்றியவர் எந்த நாட்டவர் என விவரம் தேடியபோது, https://longyibrothers.weebly.com/ என்ற அவர்களது அதிகாரப்பூர்வ இணையதள முகவரி கிடைத்தது. அதில், தரப்பட்டிருந்த தொலைபேசி எண், +66 0 879379914 வைத்து ஆய்வு செய்தபோது, இது தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தது என உறுதி செய்யப்பட்டது.

எனவே, குறிப்பிட்ட இணையதளம், யூடியுப் சேனல் நடத்தும் நபர் மியான்மர் நாட்டிற்குச் சென்றபோது, லுங்கி அணிய பழகிக் கொண்டதாகவும், அதனை தாய்லாந்து மக்களிடையே பிரபலப்படுத்தும் நோக்கில் இந்த முயற்சியை மேற்கொண்டு வருவதாகவும், குறிப்பிட்டுள்ளார்.

இதுதவிர, அவரது யூடியுப் சேனல் முழுக்க, இதுபோல, லுங்கியை மையமாக வைத்து நிறைய வீடியோக்கள் பகிரப்பட்டிருந்ததையும் கண்டோம். 

தாய்லாந்து நாட்டவர் எடுத்த வீடியோவை அமெரிக்காவுடன் தொடர்புபடுத்தி தவறான தகவல் பகிர்ந்து வருகின்றனர் என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:அமெரிக்காவில் எடுக்கப்பட்ட லுங்கி விளம்பரம்?- வைரல் வீடியோவின் முழு விவரம்!

Fact Check By: Pankaj Iyer 

Result: Partly False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •