‘’துக்ளக் பத்திரிகை பிராமணர் இல்லாதவர்களை கேலி செய்து கார்ட்டூன் வெளியிட்டது,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் (+91 9049053770) எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, இதனை சிலர் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம்.

Facebook Claim LinkArchived Link

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவு பார்க்க உண்மையிலேயே துக்ளக் பத்திரிகை வெளியிட்டதைப் போல இருந்தாலும், அந்த பதிவின் கமெண்ட் பிரிவிலேயே இது துக்ளக் பெயரில் வேண்டுமென்றே தயாரிக்கப்பட்ட போலி கார்ட்டூன் என்று குறிப்பிட்டுள்ளதைக் கண்டோம்.

இதனை வைத்துப் பார்க்கும்போதே, இது உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே தயாரிக்கப்பட்டு பரப்பப்படும் போலியான கார்ட்டூன் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.

இருந்தாலும், சந்தேகத்தின் பேரில் துக்ளக் பத்திரிகை இத்தகைய கார்ட்டூன் எதுவும் வெளியிட்டதா என அவர்களது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தகவல் தேடினோம். இந்த கார்ட்டூனில் குறிப்பிட்ட 26.08.2021 தேதியின்படி, துக்ளக் பத்திரிகை இவ்வாறான கார்ட்டூன் வெளியிடவில்லை என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:துக்ளக் பத்திரிகை பிராமணர்கள் தவிர்த்த மற்ற சாதியினரை கேலி செய்து கார்ட்டூன் வெளியிட்டதா?

Fact Check By: Pankaj Iyer

Result: False