சாட்டை துரைமுருகன் மற்றும் ஜூலி ரகசிய சந்திப்பு என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

False அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India

‘‘சாட்டை துரைமுருகன் மற்றும் ஜூலி ரகசிய சந்திப்பு,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ பிரபல நட்சத்திர ஹோட்டலில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகனும் திமுக ஆதரவாளர் ஜூலியும் ரகசிய ஆலோசனை நடத்தியதாக பாத்ரூமில் இருந்து ஒட்டி கேட்ட சன் டிவி நிருபர் வாக்குமூலம்,’’ என்று  எழுதப்பட்டுள்ளது. 

Claim Link l Archived Link      

Sun News லோகோ உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது. 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது சன் நியூஸ் பெயரில் பகிரப்படும் வதந்தி, என்று தெரியவந்தது. இதுபற்றி சன் நியூஸ் ஆசிரியர் குழுவில் கேட்டபோது, ‘’இது வேண்டுமென்றே அரசியல் உள்நோக்கத்துடன் எங்களது லோகோ பயன்படுத்தி, பகிரப்படும் வதந்தி,’’ என்று தெரிவித்தனர். 

இதன்மூலமாக, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு, போலியானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Result Stamp

Title: சாட்டை துரைமுருகன் மற்றும் ஜூலி ரகசிய சந்திப்பு என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

Fact Check By: Pankaj Iyer

Result: False

Leave a Reply