இந்திய தேசிய கீதம் உலகிலேயே சிறந்தது என்று யுனெஸ்கோ அறிவித்ததா?
‘’இந்திய தேசிய கீதம் உலகிலேயே சிறந்தது என்று யுனெஸ்கோ அறிவிப்பு,’’ எனும் தலைப்பில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
மேற்கண்ட தகவலை நமது வாசகர்கள் சிலர் வாட்ஸ்ஆப் வழியே, நமக்கு அனுப்பி உண்மைத்தன்மை பற்றி கண்டறியும்படி கேட்டுக் கொண்டனர். இதன்பேரில், ஃபேஸ்புக்கிலும் இதனை யாரேனும் பகிர்ந்துள்ளனரா என தகவல் தேடியபோது, இந்த தகவல் கடந்த பல ஆண்டுகளாகவே பகிரப்பட்டு வரும் ஒன்று என தெரியவந்தது.
Facebook Claim Link 1 | Archived Link 1 |
Facebook Claim Link 2 | Archived Link 2 |
Facebook Claim Link 3 | Archived Link 3 |
உண்மை அறிவோம்:
இந்த வதந்தி கடந்த 2008ம் ஆண்டு முதல் பரவி வருகிறது. அப்போதே, இதுபற்றி ஐ.நா. தரப்பில் உரிய மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைச் சிலர் இமெயில் வழியே, ஐ.நா.வை தொடர்பு கொண்டு, கேட்டபோது, அவர்கள் மறுப்பு தெரிவித்திருக்கின்றனர்.
இதனை டாப் 10 வதந்திகளில் ஒன்றாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் கடந்த 2016ம் ஆண்டில் பட்டியலிட்டுள்ளது.
எனவே, ஏற்கனவே வதந்தி என நிரூபிக்கப்பட்ட ஒரு தகவலை, கடந்த 2018ம் ஆண்டில், இந்தியாவைச் சேர்ந்த விளையாட்டு வீராங்கனை Babita Phogat ட்விட்டரில் பதிவிட்டார். பின்னர் தவறு என தெரியவந்ததும், அவர் டெலிட் செய்துவிட்டார்.
ஆனால், அவர் டெலிட் செய்வதற்குள், மற்றவர்களும் உண்மை என நம்பி, குறிப்பிட்ட தகவலை மீண்டும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இதுபற்றி பல்வேறு ஊடகங்களும் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருக்கின்றன.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,
1) கடந்த 2008ம் ஆண்டு முதலே, மேற்கண்ட தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அப்போதே, இதற்கு ஐ.நா. தரப்பில் உரிய மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
2) 2016ம் ஆண்டில் இது ஒரு வதந்தி என இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது.
3) ஆனாலும், உண்மைத்தன்மை தெரியாமல், மீண்டும் இதனை பல்வேறு பிரபலங்கள் முதல் சாமானியர்கள் வரை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.
இந்திய தேசிய கீதம் தொடர்பாக ஏற்கனவே பரவிய வதந்தி பற்றி நாம் வெளியிட்ட பிற செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
முடிவு:
தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
Title:இந்திய தேசிய கீதம் உலகிலேயே சிறந்தது என்று யுனெஸ்கோ அறிவித்ததா?
Fact Check By: Pankaj IyerResult: False