
‘’லண்டனில் நடிகர் விஜய் மற்றும் அண்ணாமலை ஆலோசனை’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வைரல் புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’அண்ணாமலையுடன் சீக்ரெட் மீட்டிங் போட்ட விஜய்.. பாஜகவின் தமிழக வெற்றிக் கழகத்தின் லண்டனில் நடந்த ரகசிய சந்திப்பு..’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். முதலில் இதுபற்றி தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் Bussy N Anand அலுவலகத்தை தொடர்புகொண்டு விளக்கம் கேட்டோம். அப்போது, ‘’தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கழகத்தின் கொள்கைகள், கொள்கை எதிரி, அரசியல் எதிரி, தேர்தல் நிலைப்பாடு குறித்து எங்களது தலைவர் (விஜய்) ஏற்கனவே தெளிவாக, விளக்கமாக எடுத்துரைத்துள்ளார். ஆனால், எங்களது அரசியல் எதிரிகள் வேண்டுமென்றே காழ்ப்புணர்வுடன், நாங்கள் அதிமுக, பாஜக போன்ற கட்சிகளுடன் கூட்டணி சேர உள்ளதாக வதந்தி பரப்புகின்றனர். அந்த வரிசையில் விஜய் மற்றும் அண்ணாமலை லண்டனில் சந்திப்பு என்று ஒரு போலியான புகைப்படத்தை தற்போது பரப்புகிறார்கள். இதுபோன்ற எந்த சந்திப்பும் நடைபெறவில்லை,’’ என்று நமக்கு விளக்கம் கூறப்பட்டது.
இதுதவிர, தேர்தல் கூட்டணி பற்றி பரவும் யூகங்கள், வதந்திகளுக்கு மறுப்பு தெரிவித்து, தவெக சார்பாக X தளத்தில் வெளியிடப்பட்ட பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 2022ம் ஆண்டு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் விஜய் சந்தித்த புகைப்படத்தை எடுத்து, எடிட் செய்து, ‘அண்ணாமலை உடன் லண்டனில் விஜய் ஆலோசனை’ என்று வதந்தி பரப்புகிறார்கள்.
BBC Tamil l Maalaimalar l Times of India
எனவே, நாம் ஆய்வுக்குக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் ‘உண்மையானதல்ல’ என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:லண்டனில் நடிகர் விஜய் மற்றும் அண்ணாமலை ஆலோசனை என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: False
