‘’தருமபுரம் ஆதீனத்தை விமர்சனம் செய்த நாராயணன் திருப்பதி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link 1Archived Link 1
Facebook Claim Link 2Archived Link 2

இந்த ஃபேஸ்புக் பதிவில், தருமபுரம் ஆதீனத்தை, பிராமணர்கள் வணங்கி வரவேற்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’60 ஆண்டுகால திராவிட ஆட்சியில் பிராமணர்களுக்கு உரிய ஸ்தானம் பறிபோய்விட்டது. இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள் இந்துக்களே!,’’ என்று கூறி பாஜக செய்தித் தொடர்பாளர் Narayanan Thirupathy பெயரில் வெளியிட்ட ட்வீட் ஒன்றின் ஸ்கிரின்ஷாட்டை பகிர்ந்துள்ளனர்.

இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட தகவல் உண்மை போலவே இருப்பதால், இவ்வாறு ட்வீட் எதுவும் வெளியிட்டாரா என, பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தரப்பில் விளக்கம் பெற முயற்சித்தோம். அப்போது, அவர் இதனை போலியாகச் சித்தரிக்கப்பட்ட தகவல் எனக் கூறி ட்விட்டரில் ஏற்கனவே, பதிவு ஒன்றை வெளியிட்டிருப்பதாகக் குறிப்பிட்டனர்.

இதன்பேரில், குறிப்பிட்ட ட்வீட் லிங்கை பார்வையிட்டோம். அதில், ‘’யாரோ ஒருவர் போலியாக வேலையின்றி இப்படி ஒரு தகவலை தயாரித்து பரப்பியுள்ளார்,’’ என்று கூறி நாராயணன் திருப்பதி குறிப்பிட்டிருந்தார்.

அந்த ட்வீட்டின் லிங்கை கீழே இணைத்துள்ளோம்.

Archived Link

எனவே, நாராயணன் திருப்பதி பெயரில் வேண்டுமென்றே சிலர் போலியான ட்வீட் ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:தருமபுரம் ஆதீனம் பற்றி பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் விமர்சித்தாரா?

Fact Check By: Pankaj Iyer

Result: False