
‘‘பெரிய தொழில், வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணம் உயர்வு,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ மின் கட்டண உயர்வு அமல். பெரிய தொழில், வணிக நிறுவனங்களுக்கான 3.16% மின் கட்டண உயர்வு இன்று முதல் அமல். 500 யூனிட் வரை பயன்படுத்தும் சிறு வணிகர்களுக்கு மின் கட்டண உயர்வு இல்லை- அமைச்சர் சிவசங்கர்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3 l Archived Link
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இதுபோன்ற எந்த செய்தியும் சமீபத்தில் வெளியாகவில்லை, என்றும், கடந்த 2025ம் ஆண்டு இதுபோன்று ஒரு செய்தி ஊடகங்களில் வெளியானது என்றும், தெரியவந்தது.

இதன்படி, கடந்த 2025ம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் தேதி பெரிய தொழில், வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணம் 3.16% உயர்த்தப்படுவதாக, போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருந்தார்.
Dailythanthi l Dinamani l Oneindia Tamil
இதே செய்தியை News Tamil 24×7 ஊடகமும் அப்போது வெளியிட்டிருந்தது.

News Tamil 24×7 Link 1 l Link 2
மேற்கண்ட நியூஸ் கார்டை எடுத்து, அதில் உள்ள தேதியை மறைத்துவிட்டு, புதிய செய்தி போன்று குறிப்பிட்டு வதந்தி பரப்புகிறார்கள்.
கூடுதல் ஆதாரத்திற்காக, அமைச்சர் சிவசங்கர் அலுவலகத்திலும் பேசி, உறுதி செய்துள்ளோம்.
எனவே, பழைய செய்தியை எடுத்து, புதியது போன்று தற்போது பரப்புகிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram
Title:பெரிய தொழில், வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டதா?
Fact Check By: Pankaj IyerResult: Misleading


