ஸ்டான்ட்அப் காமெடியன் பயாஸ் உசேன் (Faiyaaz Hussain) தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படம் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: X Post I Archive

ஸ்டான்ட்அப் காமெடி நிகழ்ச்சி செய்து வரும் பயாஸ் ஹுசைன் என்பவர் அண்ணாமலையுடன் இருப்பது போன்ற புகைப்படம் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், "ஒருத்தன் ஐபிஎஸ் னு பொய் சொல்லி கட்சியை ஏமாத்துறவன்.. இன்னொருத்தன் Standup காமெடியன் னு பொய் சொல்லி ஆடியன்ஸ்ஐ ஏமாத்துறவன்.. குட் காம்பினேஷன்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் ரீபோஸ்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பெரியார் பற்றி ஸ்டான்ட்அப் காமெடி நிகழ்ச்சியில் பயாஸ் ஹுசைன் என்பவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சமூக ஊடகங்களில் கண்டனங்கள் எழுந்தன. அவரை பச்சை சங்கி என்று விமர்சித்து பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் பயாஸ் ஹுசைன் தமிழ்நாடு பாஜக தலைவருடன் இருப்பது போன்று புகைப்படம் சமூக ஊடகத்தில் பகிரப்பட்டு வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்க்கும் போதே எடிட் செய்யப்பட்டது போல் தெரிகிறது. அண்ணாமலை மிகவும் உயரம் குறைவானவர் போல தெரிகிறார். தலை மட்டும் தனியாக ஒட்டியது போன்று வித்தியாசமாகத் தெரிகிறது. எனவே, இந்த புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: instagram.com

இந்த புகைப்படத்தை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, ஹுசைனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நமக்கு இதன் உண்மை புகைப்படம் கிடைத்தது. அதில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் பயாஸ் ஹுசைன் புகைப்படம் எடுத்திருப்பது தெரிந்தது. இந்த புகைப்படத்தை அவர் 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

இந்த புகைப்படத்தை எடிட் செய்து, தலையை மட்டும் மாற்றி அண்ணாமலை புகைப்படத்தை வைத்து பெரியாரைத் தவறாகப் பேசிய விவகாரத்தில் அண்ணாமலை இருப்பது போன்ற தோற்றம் ஏற்படும் வகையில் பதிவிட்டிருப்பது தெளிவானது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படம் உண்மையானது இல்லை, எடிட் செய்யப்பட்டது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பெரியாரை விமர்சித்து பேசிய ஸ்டான்ட்அப் காமெடியன் பயாசும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் என்று பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:அண்ணாமலையுடன் ஸ்டான்ட்அப் காமெடியன் பயாஸ் ஹூசைன் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: Altered