Rapid FactCheck: ஷாங்காய் நண்பன் பாலம் என்று பகிரப்படும் வீடியோ- முழு விவரம் இதோ!

உலகச் செய்திகள் சமூக ஊடகம்

‘’ஷாங்காய் நண்பன் பாலம் – முழு வீடியோ,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim I Archived Link

இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட வீடியோவை நாம் பலமுறை உற்று கவனித்தபோது, அதில் தோன்றும் வாகனங்கள் அனைத்தும் ஒரே மாதிரி இருப்பதாக உணர்ந்தோம். Mirror Image முறையில் ஒரே காட்சியை பல பிரதிபலிப்பாக மாற்றி இந்த வீடியோவில் உருவாக்கி, அதனை உண்மை போல பகிர்ந்துள்ளனர்.

ஆம், இதில் தென்படும் வாகனங்கள், பாலம் மற்றும் சாலையில் வரையப்பட்டுள்ள குறியீடுகள் என அனைத்தும் நகல் எடுத்தது போல உள்ளன.

உண்மையான Shanghai Nanpu Bridge என்பது வேறு ஒன்றாகும். அதுதொடர்பான வீடியோ ஒன்றை கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.

இதுபற்றி ஏற்கனவே நமது இலங்கைப் பிரிவினர் விரிவான ஆய்வு நடத்தி, கட்டுரை வெளியிட்டுள்ளனர். அந்த லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Fact Crescendo Sri Lanka Link

எனவே, எடிட் செய்யப்பட்ட வீடியோவை உண்மை போல நினைத்து, பலரும் பகிர்வதாக சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:ஷாங்காய் நண்பன் பாலம் என்று பகிரப்படும் வீடியோ- முழு விவரம் இதோ!

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply