வந்தே பாரத் ரயிலில் புதிய தொழில்நுட்பம் சேர்க்கப்பட்டுள்ளது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

வந்தே பாரத் ரயிலின் முன்புறத்தில் ஜேசிபி இயந்திரத்தில் உள்ள பக்கெட் அமைப்பு பொருத்தப்பட்டது போன்று படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "விரைவில் ஜப்பான் முதலீட்டில் ., உத்தரபிரதேசத்தில் நிறுவப்படவுள்ள புதிய தொழில்நுட்பம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த படத்தை Praveen Chitti என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 அக்டோபர் 13ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மாடு மீது மோதியதில் வந்தே பாரத் ரயில் பாதிக்கப்பட்டதிலிருந்து அந்த ரயிலை விமர்சித்துப் பல பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. சமீபத்தில் பஞ்சரான வந்தே பாரத ரயில் என்று ஒரு புகைப்படம் பகிரப்பட்டது. அது வந்தே பாரத் ரயில் அறிமுகம் செய்யப்படுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட படம் என்று கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

உண்மைப் பதிவைக் காண: hindustantimes.com I Archive 1 I thehindu.com I Archive 2

இந்த நிலையில், மாடுகள் மீது மோதி விபத்துக்களாவதைத் தவிர்க்கும் வகையில், ரயிலின் முன் பகுதியில் ஜேசிபி வாகனத்தில் உள்ள பக்கெட் போன்ற அமைப்பு பொருத்தப்பட்டது போன்று படம் பகிரப்பட்டுள்ளது. இந்த படம் பற்றி ஆய்வு செய்தோம். படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த புகைப்படம் சில தினங்களுக்கு முன்பு மாடு மீது மோதி விபத்துக்குள்ளான மும்பை - காந்தி நகர் வந்தேபாரத் ரயிலின் படம் என்பதும், எடிட் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரியவந்தது. விபத்து காரணமாக உடைந்த வந்தே பாரத் ரயிலின் மூக்கு பகுதி சரி செய்யப்பட்டது என்று பகிரப்பட்ட படத்தில் ஜேசிபி இயந்திரத்தின் பக்கெட்டை வைத்து எடிட் செய்திருப்பது தெரிந்தது.

ஜேசிபி பக்கெட் என்று கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ளது போன்ற படம், ஜேசிபி பக்கெட் விற்பனை இணையதளத்தில் கிடைத்தது. இதன் மூலம் இந்த படம் எடிட் செய்யப்பட்டது என்பது உறுதியாகிறது.

முடிவு:

வந்தே பாரத் ரயிலின் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் என்று பரவும் படம் எடிட் செய்யப்பட்டது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ஜேசிபி பக்கெட் பொருத்தப்பட்ட புதிய வந்தே பாரத் ரயில் என பரவும் போலியான புகைப்படம்!

Fact Check By: Chendur Pandian

Result: Altered