சவூதி அரேபியாவை விட குஜராத்தில் பெட்ரோல் விலை குறைவு என்று அண்ணாமலை கூறினாரா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

சவூதி அரேபியாவை விட குஜராத் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் விலை குறைவு, என்று பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை கூறியதாகக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் எண்ணில் (+91 9049053770) நமக்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் தகவல் தேடியபோது பலரும் ஷேர் செய்வதைக் கண்டோம்.

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட நியூஸ் கார்டு உண்மையா என்று நாம் தந்தி டிவி டிஜிட்டல் பிரிவை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, ‘’இது போலியான ஒன்று; நாங்கள் இப்படி எந்த செய்தியும் வெளியிடவில்லை,’’ என்றனர். அடுத்தப்படியாக, பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவை தொடர்பு கொண்டபோது, இப்படி அண்ணாமலை எங்கேயும் பேசவில்லை, என்றனர்.

எனவே, அண்ணாமலை பேசாத ஒன்றை, தந்தி டிவி பெயரில் போலியாகச் சித்தரித்து மேற்கண்ட வகையில் வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:சவூதி அரேபியாவை விட குஜராத்தில் பெட்ரோல் விலை குறைவு என்று அண்ணாமலை கூறினாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False