அரபு நாடுகளில் பணிபுரிவோர் உண்மையான இந்துக்கள் அல்ல என்று அர்ஜூன் சம்பத் கூறினாரா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

‘’அரபு நாடுகளில் பணிபுரியும் இந்துக்கள் உண்மையான இந்துக்கள் அல்ல,’’ என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக, ஒரு பதிவு சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

வாட்ஸ்ஆப் வழியே வாசகர் ஒருவர் நமக்கு இதனை அனுப்பியிருந்தார். இதே ஸ்கிரின்ஷாட் பதிவை, பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பகிர்கின்றனர்.

Facebook Claim Link I Archived Link

கமெண்ட்களில் கூட அர்ஜூன் சம்பத் நிஜமாகவே இப்படி கூறியதாகப் பலரும் நம்பி, அவரை கார சாரமாக விமர்சித்திருப்பதையும் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
இந்து மக்கள் கட்சி பற்றியும், அதன் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் பற்றியும் போலியான ட்விட்டர் ஐடி உருவாக்கி சிலர் வேண்டுமென்றே போலியான தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். அதனை மற்றவர்கள் உண்மை என நம்பி ஷேர் செய்வது வழக்கமாகியுள்ளது.

இவை பற்றி நாமும் அவ்வப்போது ஆய்வு செய்து, கட்டுரை வெளியிட்டு வருகிறோம். அந்த வரிசையில் பகிரப்பட்ட மற்றொரு போலியான பதிவுதான் இதுவும். உண்மையில், அர்ஜூன் சம்பத் இவ்வாறு கூறவில்லை. நாம் இதுபற்றி அவரது கட்சி தரப்பில் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.

இந்து மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் ஐடி (https://twitter.com/Indumakalktchi) வேறொன்றாகும். இதில், Kaaji makkal katchi என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியும் கூட இதனை சரியாகப் படிக்காமல் ஷேர் செய்கின்றனர்.

இந்து மக்கள் கட்சி பெயரில் இவ்வாறு வெளியான போலி பதிவுகள் பற்றி ஏற்கனவே நாம் வெளியிட்ட சில செய்திகளின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

Fact Crescendo Tamil Link 1 I Fact Crescendo Tamil Link 2 I Fact Crescendo Tamil Link 3

எனவே, நகைச்சுவைக்காகச் சிலர் இத்தகைய தகவலை தயாரித்து பகிர, மற்றவர்கள் உண்மை போல நம்பி பகிர்கின்றனர் என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:அரபு நாடுகளில் பணிபுரிவோர் உண்மையான இந்துக்கள் அல்ல என்று அர்ஜூன் சம்பத் கூறினாரா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: Misleading

Leave a Reply